Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆந்திராவில் சிக்கியுள்ள தமிழர் நிலங்களை தாய் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டம் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இப்போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கம் ஏற்பாடு செய்திருந்தனர் . இப்போராட்டத்தில் பல் வேறு தமிழர் இயக்கங்கள் கலந்து கொண்டு தமிழர் இழந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என முழங்கினர். திராவிட அமைப்பினர் மற்றும் கட்சிகளை யாரும் அழைக்கவில்லை. தமிழர் நிலங்களை நாம் இழந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது திராவிடக் இயக்கங்கள் தான். அதனால் இழந்த பகுதிகளை தமிழ் மக்களே போராடி மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய இயக்கங்களே இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியது. 

இப்போராட்டத்தில் முனைவர் அருகோ, தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் , தோழர் அதியமான் தமிழர் முன்னேற்ற கழகம் , தோழர் அருணபாரதி தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சி , தோழர் ஜெயபிரகாசு தமிழர் குடியரசு முன்னணி, தோழர் இசைமொழி தமிழர் எழுச்சி இயக்கம் , இராஜ்குமார் பழனிசாமி தமிழர் பண்பாட்டு நடுவம், இராஜா ஸ்டாலின் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம், ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர். தமிழர் அனைவரும் ஒற்றை குரலில் இழந்த தமிழர் தேசத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் . எல்லை மறு சீரமைப்புக் குழு ஒன்று நடுவண் அரசு உருவாக்கி மீண்டும் தமிழக வரைபடத்தை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தமிழர்கள் இழந்த பகுதி சுமார் 70000 சதுர கி.மீ பரப்பளவு. இதில் பாதி ஆந்திராவில் உள்ளது. அதை முழுவதும் மீட்டு தமிழகத்தோடு இணைத்தால் , தமிழகம் மிகப் பெரிய மாநிலமாக இருக்கும். மேலும் இந்திய அரசின் தொடர் தொல்லைகளில் இருந்து விடுபட மாநில சுயாட்சி கோரிக்கை முன்வைக்கப் பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் தமிழராக இருக்க வேண்டும் எனவும் , தமிழர் நாட்டின் நிலங்களை இனி அந்நியர்கள் வாங்க அனுமதிக்கப் கூடாத வகையில் நிலவுடைமை சட்டம் தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. 

இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் ! வாழ்க தமிழ்! வளர்க தமிழகம் !













[vuukle-powerbar-top]

Recent Post