Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தமிழகம் இழந்த பகுதியை மீட்கக் கோரி தமிழ் அமைப்புகள் உண்ணாநிலை போராட்டம் (படங்கள்) 

இன்று தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பாக இழந்த தமிழர் நிலத்தை மீட்க ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வெற்றிகரமாக நடந்தது. 

தமிழக பகுதியான ஆந்திராவில் இருக்கும் சித்தூர் மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் போராடும் நிலையில், தாய் தமிழக உறவுகள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் . அந்த வகையில் தமிழக அரசு சித்தூர் மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க நடுவண் அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றைய போராட்டம் நடந்தது. 

தமிழகத்தின் வட எல்லையை மீட்ட ம.பொ.சி அவர்களின் மகள் மாதவி இந்நிகழ்வில் பங்குபெற்று தமிழர் நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் . தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் நீர் பாசனப் பகுதிகள் உள்ளன . ஆனால் அந்தப் பகுதிகளுக்கு நீர் வழங்கும் நீர் நிலைகள் ஆறுகள் அண்டை மாநிலங்களில் உள்ளன. இதனால் விளைநிலங்கள் தமிழகத்தில் இருந்தாலும் நீருக்கு அண்டை மாநிலங்களின் தயவை நாட வேண்டி உள்ளது. இந்த நீர் நிலைகளை உள்ள பகுதிகள் யாவும் தமிழகத்திற்கே உரிய பகுதிகளாகும். ஆந்திரா கேரளா கர்நாடகவில் உள்ள இந்த நீர் நிலைப் இப்பகுதிளை முறைப்படி தமிழகத்தோடு இணைக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு அதற்கான சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் , தமிழக கட்சிகள் யாவும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்தில் பாவலர் மு இராமச் சந்திரன், முனைவர் அருகோ, முனைவர் தெய்வநாயகம், தோழர் அதியமான், வழக்கறிஞர் குப்பன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் , உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தமிழகத்தில் இருந்து நிலங்கள் பிரிக்கப்பட்ட காரணத்தால் இப்போது அண்டை மாநிலங்களின் வாழும் தமிழர்கள் மீண்டும் தமிழகத்தோடு இணைவது தான் தமிழினத்தை காக்கும் வழியாகும் என்பதும் உணர்த்தப்பட்டது. 

தமிழர் நிலம் மீட்போம் , தமிழர் நலம் காப்போம்














[vuukle-powerbar-top]

Recent Post