Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது. மலேசியா தமிழர்கள் கோரிக்கை 

மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட " மெட்ராஸ் காபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் 
அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் தொலை நகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட இந்த மனுவில் மெட்ராஸ் கபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்சே உதவியுடன் வெளிவந்த இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது ஆகவே இப்படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 



[vuukle-powerbar-top]

Recent Post