Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை. பேனர்கள் கிழிப்பு 

நாளை வெளியிட தயாராக இருந்த மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழில் வெளியிட மதுரை நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழகத்தில் ஹிந்தியில் வெளியிட இருந்தது. தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து அப்படம் தமிழகத்தில் வெளியாவது கடினம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திரையரங்கு உரிமையாளர்களும், மக்கள் மனதை புண்படுத்தும்படியான காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. 

சென்னையில் மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தை முன்னெடுத்து விட்டனர் .  

இப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார் , படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவைகளாக இருக்கின்றன, பிரபாகரன் தீவிரவாதியாக காட்டப்படும் திரைபடம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானபடுத்து போல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார் .


இந்நிலையில் மும்பையில் களத்தில் இறங்கி முதல் அடியை கொடுத்துள்ளனர் மும்பை பாஜக கட்சியினரும் மற்றும் தமிழ் அமைப்பினரும். 

இன்று மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 


சாதி மதம் அரசியல் கடந்து ஒற்றுமையாக களமாடினர் தமிழர்களுக்கு  மும்பையில் சாதித்து விட்டனர் . தமிழகத்தில் நம் பலத்தை காட்டுவோம் என்று கூறுகின்றனர் தமிழக தமிழர்கள்.

 
[vuukle-powerbar-top]

Recent Post