Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தமிழர்களின் போராட்டம் எதிரொலி. பிரித்தானியாவில் மெட்ராஸ் கபே திரையிடப்படவில்லை. நகரில் ரி 
ஐதராபாத் நகரில் மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக தானும் தன் இரு 
பிள்ளைகளுடன் மட்டுமே போராடிய வீரத் தமிழர் 

சினி வேர்ல்டை அதிரவைத்த தமிழ் மக்களின் முற்றுகைப் போராட்டம் !

தமிழர்களை பயங்கரவாதிகள் போலச் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள மற்றாஸ் கஃபே திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) லண்டன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை வெளியிடவேண்டாம் எனத் தெரிவித்து, லண்டனில் உள்ள பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தொலைபேசியூடாக சினி வேர்ல்ட் சினிமாவுக்கு கோரிக்கை விடுத்தார்கள். அதனை அவர்கள் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. இதனையடுத்து நேற்றைய தினம் (வியாழக்கிழமை) லண்டனில் உள்ள பல தமிழர்கள் திரண்டு பாரிய முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, சினி வேர்ல்ட் தலைமை காரியாலயம் முன்பாக , நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இப்படத்தை திரையிடக்கூடாது என தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்று சேர்ந்து இணைய விண்ணப்பமும்  முன்னெடுத்தனர். அதன் விளைவாவாக சினி வேல்ர்ட் நிறுவனம் தமிழர்களின் மனம் புண்படும்படி இப்படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தது. வாழ்த்துகள் பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு.









[vuukle-powerbar-top]

Recent Post