Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆந்திராவிடம் இழந்த தமிழர் பகுதியான  சித்தூர் மாவட்டத்தை மீட்க  
சென்னையிலிருந்து திருத்தணி வரை இருசக்கர ஊர்திப் பரப்புரைப் பயணம் 

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கும் போது... தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த தமிழர் பகுதிகளை ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களிடம் 

இழந்தோம். இவ்வாறு இழந்த தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் கடந்த 11-08-2013 

அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக... 25-08-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மா.பொ.சி. சிலையிலிருந்து... திருத்தணி 

மங்கலக்கிழார் சிலை வரை இருசக்கர ஊர்திப் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலர் ப.வேலுமணி தலைமையில் நடைபெற்ற 

பரப்புரை பயணத்தை தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். எழுகதிர் ஆசிரியர் அருகோ, ஆதி ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர். 

த.எ.இ. மாவட்டச் செயலர் வெ.குமரவேல் மா.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து பயணத்திற்கு முன்னிலை வகித்தார்..

இதில் தமிழர் தேசியக் கூட்டணி, தமிழர் உலகம், தமிழ்நாடு மாணவர் பேரவை, மக்கள் நல இயக்கம், தமிழருக்கான உரிமை மீட்புக் குழு ஆகிய அமைப்புத் தோழர்கள் 

பங்கேற்றனர். பாவலர் அருட்கண்ணனார், இயக்குநர் ஆற்றலரசு ஆகியோரும் பங்கேற்று உறுதுணையாக இருந்தனர்.

புறப்பட்ட தமிழர் எழுச்சி இயக்கத்தினர்...

தியாகராயர் நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, திருவள்ளூர், வழியாக 

திருத்தணிகைக்கு சென்றனர்.

வழியில் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அதியமான்... திருமுல்லைவாயிலில் நாம் தமிழர் கட்சியின் திருவள்ளுவர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செள. 

சுந்தரமூர்த்தி... மக்கள் நல இயக்கத்தின் தலைவர் முல்லைத் தமிழன், தமிழருக்கான உரிமை மீட்புக் குழுவின் தலைவர் நாகராசன்.... விடியல் முருகேசன்... அமுதன் 

ஆகியோர் பயணம் மேற்கொண்ட தோழர்களை வரவேற்று வாழ்த்தினர். வழிநெடுகிலும் முழக்கமிட்டும் கருத்துகளை பரப்பியும் வந்தனர்.

இறுதியில் பயணித்த தோழர்கள் திருத்தணிக்கு சென்றடைந்தனர். அங்கு தமிழர் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் பா.குப்பன் தலைமையில் 

தமிழ்ச் சான்றோர்களும்.. திருத்தணி பகுதி தமிழ் உணர்வாளர்களும் வருகைத் தந்து வரவேற்றனர். தொடர்ந்து முகாமையாக மக்கள் கூடும் சந்திப்புகளில் முழக்கங்கள் 

செய்தும்... சித்தூர் மீட்புக்கான கருத்துகளையும் ஆங்காங்கே பேசியவாறே சென்றனர்..

பொது மக்கள் வழிதோறும் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நமது தோழர்கள் கொடுத்த 
துண்டறிக்கையை பெற்ற தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு 

வாழ்த்துகளை தெரிவித்தனர். இப்பரப்புரையால் திருத்தணி முழுதும் எழுச்சியோடு காணப்பட்டது. இப்பரப்புரையில் பங்கேற்ற பல தமிழ்ச் சான்றோர்கள் தங்களுடைய 

கடந்த கால எல்லை மீட்புப் போராட்டங்களை விளக்கியது... இன்றைய இளைய தலைமுறையினர் இன்னும் அதிகளவில் தமிழ்ப் பணி செய்ய வேண்டும் என்ற 

உணர்வை உருவாக்கியது.

இறுதியில் மாலை 6.45 மணி அளவில் வடஎல்லை மீட்புக்காகப் போராடிய தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முழக்கங்கள் இடியாய் 

ஒலித்தது. மிகுந்த எழுச்சிக்கிடையில் வழக்குரைஞர் பா.குப்பன் பயணத்தை நிறைவுச் செய்து வாழ்த்தியதோடு... தமிழர் எழுச்சி இயக்கத்தின் எல்லை மீட்புக்கான 

தொடர் போராட்டங்களுக்கு துணை நிற்பேன் என்று கூறி ஊக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அவர் பரப்புரையில் ஈடுபட்ட அனைவரையும் சிறப்பித்து சென்னைக்கு 

வழியனுப்பினார். 

நேற்றைய உழைப்பே
இன்றைய விளைச்சல்
இன்றைய உழைப்போ
நாளைய விளைச்சல்

என்ற வரியின் கருத்தை உணர்ந்து நாளைய தமிழகம் தமிழர்களுக்கானதாக அமைந்திட... இழந்த மண்ணை மீட்டு அனைத்து வளமும் பெற்றிட தமிழர்களின் 

போராட்டத்தை தொடருவோம் என்று வீர முழக்கமிட்டு நம்பிக்கையோடு தோழர்கள் அனைவரும் சென்னை திரும்பினர்.[vuukle-powerbar-top]

Recent Post