Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பள்ளி விளையாட்டு நாள் விழாவில் சிங்களக் கொடி! அகற்றக் கோரி பெற்றோர்கள் போராட்டம் ! 

என் மகள் படிக்கும் பள்ளியில் இன்று விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சியுடன் நாங்களும் பங்கேற்றோம். பெற்றோர்கள் பல்லாயிரம் பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . இந்த விழாவில் பொதுநலவாய நாடுகள் (Commonwealth Countries)  பங்கேற்கும் போட்டியாக இந்த விழா அனுசரிக்கப்பட்டது. குழந்தைகள் உற்சாகமாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். அப்போது தான் நாங்கள் பார்த்த காட்சி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர்கள் சிலரை ஒவ்வொரு நாட்டின் கொடியை ஆடையாக அணிய வைத்து விளையாட்டு திடலில் நிற்க வைத்தனர். அதில் சிங்கள கொடி யை மேலாடையாக அணிந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். இதுவே பெரிய அதிர்ச்சியாக இருந்தபோது, விளையாட்டு திடலில் பாகிஸ்தான் , வங்காள தேசம் உட்பட சிங்கள கொடிகளும் வைக்கப் பட்டிருந்தன. நம் இனத்தையே  இனத்தையே கருவறுத்து  கொன்று ஒழித்த நாட்டின் கொடியை எவ்வாறு தமிழ் மண்ணில் பறக்கலாம் என்று எங்களுக்கு கோபம் மேலோங்கியது . 

நிகழ்ச்சி வேறு உச்சகட்டத்தில் இருந்தது . மாநகர தலைமை காவல்துறை கண்காணிப்பளர் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தார் . எனினும் சிங்கள கொடி அங்கு பறப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை . உடனே அரங்கின் பின் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்டோம் . எங்குளுக்கு ஆதரவாக சில பெற்றோர்களும் குரல் கொடுத்தனர். ஒரு சில பெற்றோர்கள் எங்கள் பிள்ளைக்கு சிங்கள கொடியுடன் கூடிய ஆடையை அணிவிதத்தது எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று வேதனைப்பட்டனர்.  பள்ளி நிர்வாகமோ , இக்கொடிகள் மாணவர்களின் அறிவை வளர்பதற்கும், அவர்கள் இந்நாடுகளின் கொடியை பற்றி தெரிந்து கொள்வதற்கும் தான் வைத்துள்ளோம், இதில் அரசியல் இல்லை என்றனர்  என்றனர்.  நாங்களும் , இக்கொடி இங்கு வைப்பது தமிழர்களை அவமதிப்பதாக உள்ளது , இக்கொடியை உடனே அகற்றவும் அல்லது நாங்களே பிடுங்கி எறிவோம் என்றோம் . சிறிது சலசலப்பிற்கு பிறகு பள்ளி முதல்வரே வெளியில் வந்து எங்களோடு பேசினார் . நாங்கள் கூறினோம் , எட்டு கோடி தமிழர்களை புண்படுத்தும் விதமாக நீங்கள் தமிழ் மண்ணில் சிங்கள கொடியை வைத்துள்ளீர்கள் , அதை நீங்கள் அகற்ற வேண்டும் என்றோம் . உடனே அவர் , இது பள்ளி விளையாட்டு விழா இங்கு பல நாடுகள் கொடி வைப்பதால் என்ன நடந்து விடப் போகிறது என்று கூறினார் . உடனே நாங்கள் , இன்று வரை தமிழ் மீனவர்களை கொன்று குவிக்கிறான் சிங்களவன் , லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டின் கொடியை இப்பள்ளி பயன்படுத்துவது ஏற்புடையது இல்லை . நீங்கள் நீக்கித் தான் ஆகவேண்டும் என்று குரல் எழுப்பினோம். தமிழகத்தில் சிங்கள கொடி பறப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றோம்.  உடனே நிலைமையை புரிந்து கொண்டு பள்ளி முதல்வர் கொடிகளை அகற்ற சம்மதம் தெரிவித்தார் . சிறுது நேரத்தில் அனைத்து கொடிகளும் அகற்றப்பட்டது . 

இதை நான் இங்கு பதிவிடக் காரணம் பல பள்ளிகள் பன்னாட்டு கொடிகளை ஏற்றுகிறோம் என்ற பேரில் இனப்படுகொலை செய்த இலங்கையின் கொடியை தமிழகத்தில் பயன்படுத்துகிறார்கள். பெற்றோர்களும் , பொதுமக்களும் எந்த வகையிலும் இதற்கு துணை போகக் கூடாது . எங்கு சிங்கள கொடி பறந்தாலும் , அதை உடனே அப்புறப்படுத்த வேண்டும் . பள்ளிகளும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு , மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வரவேண்டும். அப்போது தான் நம் இழந்த சொந்தங்களுக்கு நீதி கிடைக்கும்.

நன்றி 
இராஜ்குமார் பழனிசாமி 

[vuukle-powerbar-top]

Recent Post