Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாயே என்று கூறிய மலையாள பெண்மணிக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்க சின்னத் திரை கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டன. ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவியும் காவல் துறையால் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற செய்தியும், மலையாளிகள் எப்படி உயர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக காவல்துறையை பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியையும் பகிர்ந்தனர். 

இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் அவர்களும், சின்னத்திரை கலைஞர்கள் உமா பத்மநாபன், விஜய் ஆதிராஜ் அவர்களும் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதராவாக குரல் கொடுத்தனர். தமிழ் அமைப்புகளான நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சி இயக்கங்கள் சார்பில் ஜேம்ஸ் வசந்தனை 'தமிழ் நாய்' என்று இழிவு படுத்திய மலையாள பெண்மணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த மலையாள பெண்மணி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. மலையாள பெண்மணிக்கு ஆதரவாக செயல்பட்ட மலையாள அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு தமிழ் அமைப்புகளின் சார்பில் நாம் கேட்டுக் கொண்டோம். 

ஜேம்ஸ் வசந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதி நாளை ஒரு சாதாரண தமிழனுக்கும் ஏற்படலாம் என்ற வகையில் , இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனவும் முதல்வரை கேட்டுக் கொண்டோம். பெண்களுக்கான சிறப்பு சட்டத்தை மலையாள பெண்மணி தவறாக பயன்படுத்தியது பெண்களையே இழிவு படுத்தும் விதமாக அமைந்துள்ளது என உமா பத்மநாபன் கூறினார்.

பொய் வழக்கு போட்டு காவல்துறை ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தது குறித்து தமிழக முதல்வர் ஒரு முழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப் பட்ட தனக்கு உரிய நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்தார். 65 வயது மூதாட்டிக் தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும் என்றும் , தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் காவல் துறையினர் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறினார். இதற்க்கு பின்னணியில் பெரிய மலையாளி ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்த ஜேம்ஸ், கால்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று இழிவு படுத்தியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். எனினும் தமிழ் அமைப்புகள் இவ்வாறு தமிழர்களை இழிவு படுத்தி பேசியதற்கு அப்பெண்  உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அந்த மலையாள பெண்ணின் வீடு முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்தனர் 







[vuukle-powerbar-top]

Recent Post