Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வரலாற்றை  திரிக்கும் மெட்ராஸ் கபே படத்தை தடை செய்க: தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள். 

தமிழீழ விடுதலைக்கான போராட்டம் வெறும் ஆயுதப் போராட்டம் மட்டுமே அல்ல. ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அமைதி அறவழியில் தந்தை செல்வா தலைமையில் ஈழத் தமிழர்கள் போராடினார்கள். ஆனால் சிங்கள இன வெறி அரசு அப்போதும் அவர்கள் போராட்டத்தை  மதிக்கவில்லை. எந்த வகையில் ஈழத் தமிழர்களின் நியாயமான உரிமைகளை கொடுக்கவில்லை. சிங்கள அரசின் தமிழின விரோதப் போக்கு அதிகமாக, அதன் பிறகு தான் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தனர். ஆயுதப் போராட்டத்தை மிகவும் கட்டுக்கோப்பாக விடுதலைப் புலிகள் முன்னெடுத்துச் சென்றனர்.  

இந்த நிலையில் தான் இந்திய அமைதிப் படை இலங்கை சென்று விடுதலைப் புலிகளோடு போரிட்டனர். அவர்களின் ஆயுதப் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தனர். அப்போது பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.  மீள முடியாத துயரத்தில் தமிழர்கள் தள்ளப்பட்டனர். உரிமைகள் எதுவும் பெறாத நிலையில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை களையக் கூறினர் இந்திய அமைதிப் படை. பல வகையிலும் அவர்களை மிரட்டினர். ஆனால் புலிகளோ சமரசம் செய்யாமல் தங்கள் இனம் காக்க போரிட்டனர். 

இப்படி ஒரு வரலாறு இருக்க, விடுதலை புலிகளின் தலைவர் யாருக்கும் அடிபணிய மாட்டார், அவர் ஒரு பிடிவாதக்காரர்,  இலங்கை தமிழர் பகுதியை முழுவதும் தனது கட்டுப் பாட்டுகள் கொண்டு வருவதோடு,  தெற்காசியா முழுவதும் தனது கட்டுக்குள்  கொண்டுவர துடித்தார். அதனால் தான் அவர் இந்தியா உடன் சமதான பேச்சுக்கு வரவில்லை போன்ற பொய்யான செய்தியை மெட்ராஸ் கபே படத்தில் காட்டியுள்ளனர்.  

படத்தின் கதாநாயகன் ஜான் ஆப்ரகாம் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் ரகசியமாக கொலைகாரன்  மகிந்த ராஜபக்சேயை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளான் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான். 1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர். 

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான ரா அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவனாக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை, பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனே முன்னின்று கொலைக்கான திட்டம் தீட்டியதாக படத்தில் காட்டியுள்ளனர் . இது அடிப்படையில் ஆதாரமற்றது. மேலும் அமைதிப் படைகளின் அட்டூழியங்களை காட்டாமல், பிடிவாதமாக பிரபாகரன் ராஜீவ் காந்தி அரசை எதிர்ப்பது போல் படத்தில் காட்டுகின்றனர். இது வரலாறு அறியாத மனங்களில் நஞ்சை கலப்பதற்கு ஒப்பாகும். திட்டமிட்டே தமிழீழ தேசிய தலைவரை தீய சக்தியாகவும், இந்திய உளவுத் துறை மற்றும் அமைதிப் படையை நேர்மையான சக்தியாகவும் , ராஜீவ் காந்தியை ஒரு அப்பாவித் தலைவரைப்  போலவும் காட்டியுள்ளனர். படத்தை பார்க்கும் நபர்களுக்கு இந்திய ராணுவத்தின் மீது தான் பரிதாபம் வருமே அன்றி ஈழ விடுதலை போரின் துன்பங்கள் துயரங்கள் அவர்கள் பார்வைக்கு சென்று சேராது. 

மேலும் பல காட்சிகள் , விடுதலை புலிகளின் கொள்கைகளுக்கு நேர் விரோதமாகவே இப்படத்தில் காட்டப்பட்டு உள்ளன. நடக்காத பல செய்திகளை புனைந்துள்ளனர். இப்படம் வெளிவந்தால் அது தமிழினத்தை கொச்சை படுத்துவதாக அமைந்துவிடும். ஒரு விடுதலை வரலாறு தவறாக சித்தரிக்கப்படும். அதனால் இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழக முதவரை கேட்டுக் கொள்கிறது. ஒருவேளை இப்படம் திரையிடப்பட்டால், திரையரங்குகளை நாங்கள் அறவழியில்  முற்றுகையிடுவோம் என அறிவிக்கிறோம்.     
-
[vuukle-powerbar-top]

Recent Post