Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் பட்டினிப் போராட்டம் தொடங்கினர் ஈழத் தமிழர்கள்.

செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைகப்படுள்ளனர். இதில் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருந்தும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றாமல் சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக இவர்களை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 5 நபர்களை விடுதலை செய்யவதாக காட்டி மேலும் 10 நபர்களை இங்கு கொண்டு சிறை வைக்கிறது கியூபிரிவு காவல்துறை. இதனால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. தற்போது உள்ள 52 அகதிகளில் பலர்  ஏற்கனவே பல முறை உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளனர். சிலருக்கு விடுதலை உத்தரவும் வந்துள்ளது . இருந்தும் காவல்துறை இவர்களை விடுவிக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இம்முறை முகாம்வாசிகள் முடிவாக ஒரு சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முகம்வாசிகளின் பெயர்கள் வருமாறு

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் போராட்டத்தை தொடங்கினர். நாளிமுதல் மேலும் பலரும் இப்போராட்டத்தில் இணையுள்ளதாக தெரிவித்தனர்.



  
[vuukle-powerbar-top]

Recent Post