Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அனைவருக்கும் தாய் மொழிக் கல்வி உரிமை. கோட்டை நோக்கி பிரம்மாண்ட பேரணி! 3000 பேர் கைது 

தமிழக அரசு நடப்புக் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டதைக் கைவிட வலியுறுத்தி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கும் கோரிக்கைப் பேரணி கோட்டையை நோக்கி இன்று 07.08.201 3 அன்று சென்னையில் காலை 10 மணி அளவில் மன்றோ சிலையில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரம் தமிழ் உணர்வாளர்கள் பங்கெடுத்து அன்னைத் தமிழை மீட்க முழக்கமிட்டனர். பின்பு காவல் துறை அனுமதியை மீறி பேரணி சென்றதால் அனைவரையும் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. 

தமிழ் தேசத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய் மொழிக் கல்வி தமிழக அரசால் மறுக்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களும் தாய் மொழிக் கல்வியை தருவதில்லை. தாய் மொழியை அனைவருக்கும் கட்டாயாமாக்கும் பொருட்டும், அனைவரும் தாய் மொழியில் உரிமையோடு கல்வியை பயிலவும் இந்த கோரிக்கைகள் அரசுக்கு தமிழ்க் கல்வி கூட்டியக்கத்தின் சார்பில் வைக்கப்படுகிறது. ஏழை முதல் பணக்காரன் வரை தாய் மொழியில் படித்தால் மட்டுமே ஒரு வளமான சமுதாயம் உருவாகும். அதை உருவாக்குவது தமிழர்களின் கடமையும் ஆகும். இப்பேரணி வெற்றியடையட்டும்.

முதல்வரின் கவனத்தை ஈர்க்க இன்று தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் அணைத்து கட்சி தலைவர்களும் ஒன்றாக கோட்டைக்கு சென்று தமிழ் வழிக் கல்வியை நிலைநாட்ட மனுவை கையளித்தனர் .



















[vuukle-powerbar-top]

Recent Post