Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிள்ளையார் கரைப்பும் அப்பாவித் தமிழர்களும் !

இன்று சென்னையில் மட்டும் 185௦ பிள்ளையார் இன்று கடலில் கரைக்கப் பட்டது.  பிள்ளையார் நான்மியை  விநாயர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்வா அமைப்புகள் தீவிரமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழர்கள் வீட்டினுள் அமைதியாக மண் சிலை பிள்ளையார் வைத்து அமைதியான முறையில் கொண்டாடி வந்தனர். அண்மையில் இந்த பிள்ளையார் நான்மி விழாவை வடநாட்டை சேர்ந்த இந்துத்வா அமைப்புகள் கையில் எடுத்தன. இதை இந்து எழுச்சி விழாவாக அறிவிக்கத் தொடங்கின . இஸ்லாமியர் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக இவ்விழாவை முன்னெடுக்க தமிழர்களை கொம்பு சீவி விட்டனர் வடநாட்டு இந்துத்வா அமைப்புகள். ஒவ்வொரு சிலையின் அருகிலும் வடமொழி எழுத்தை தாங்கிய ஓம் என்ற வாசகம் பொருந்திய கொடியை பார்க்கலாம். ஒவ்வொரு பிள்ளையார் சிலை நெற்றியிலும் சமஸ்க்ரிதத்தில் ஓம் என்று எழுதப் பட்டிருக்கும். இந்த திட்டமிட்ட சமஸ்க்ரித்த இந்தித் திணிப்பை தமிழர்கள் தட்டிக் கேட்கவும் முடியாது. 

அப்பாவித் தமிழர்களும் இவ்விழா தமிழர்கள் விழா என்று நம்பி , வடநாட்டில் நடப்பது போல் ஒருவார கால விழாவாக கொண்டாட விளைந்தனர். அதனால் பிள்ளையார் நான்மி நாள் முடிந்தும் , ஒரு வார காலத்திற்கு தமிழர்கள் வீதியில் ஆங்காங்கே பிள்ளையார் சிலையை வைத்து , பெரும் சத்தத்துடன் பாடல் ஒலிக்கச் செய்தனர். அருகில் பள்ளிகள், மருத்துவ மனைகள், குடியிருப்புகள் இருந்தாலும் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் நாள் முழுவதும் பாடலை ஒலிபரப்புகின்றனர். பின்பு இந்த சிலைகளை தாரை தப்பட்டைகள் முழங்க சாலையில் கூட்டம் கூட்டமாக நகர்த்தி செல்கின்றனர். இதனால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. 

மேலும் இந்த சிலைகளை ஒரு வார காலம் பாதுகாக்க ஒவ்வொரு சிலைக்கும் மூன்று அல்லது நான்கு காவல்துறை பணியாட்கள்  தேவைபடுகின்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த போதிய அளவு காவல்துறையினர் இல்லை என்று புலம்பும் அரசு சென்னையில் மட்டும் பல ஆயிரம் காவல்துறையினரை பிள்ளையார் பாதுகாப்புக்கு மட்டும் நியமிக்கிறது. கடலில் கரைக்கும் நாளில் மட்டும் 18,000 காவல்துறையினர் சென்னையில் பிள்ளையார் ஊர்வலத்தில் நியமிக்கப் படுகின்றனர். குறிப்பாக மசூதி வழியில் செல்லும் ஊர்வலத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப் படுகிறது. 

கடலில் ஏற்கனவே பல குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், இப்போது இத்தனை பிள்ளையார் சிலைகளை கடலில் கரைப்பதை சுற்றுப் புற சூழல் ஆர்வலர்கள் கண்டிகின்றனர்.  இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள பிள்ளையார் சுமார் 20 கிலோ வெள்ளியில் செய்யப்பட்டது . இதன் விலை சுமார் 10 இலட்சம் ரூபாய் ஆகும். இந்த பத்து இலட்சம் ரூபாய் கடலில் எந்த பயனும் இல்லாமல் தான் இருக்கப் போகிறது. இது கடலில் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கரையாது. இப்படி பணத்தை செலவு செய்வதற்கு பதில் மதவாதிகள் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் உதவி செய்தால் அது உண்மையான கடவுள் வழிபாடாக அமையும். ஆனாலும் இந்துத்வா அமைப்பினர் யார் சொல்வதையும் கேட்கப் போவதில்லை. ஆயிரக்கணக்கில் ரசாயனப் பிள்ளையார்கள் கடலில் கரைப்பதால் கடல் மாசு ஏற்படுகிறது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு, தொடர்ந்து பாடல் ஒலிப்பதால் ஒலிமாசும் ஏற்படுகிறது . 

இதையெல்லாம் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், பொதுமக்களுக்கும் உள்ளது. வடநாட்டு மதவாதிகள் பேச்சை கேட்டு இப்போது வீணான ஆடம்பர பிரமாண்ட பிள்ளையார் ஊர்வலங்களை இனியும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. நமது சுற்றுப் புற சூழலில் நாம் தான் பாதுகாக்க வேண்டும். வடநாட்டு மதவாத சதிகளுக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாத்திட முன் வர வேண்டும். ஆரிய இந்துகளின் பொய்யான மதவாதத்திற்கு துணை போகக் கூடாது. 

[vuukle-powerbar-top]

Recent Post