Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவரின் இந்தி வெறிப் பேச்சு ! 

தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் எப்படி மாணவர்களை தவறாக வழி நடத்துகிறார் என்பதை நாம் காணலாம். சன் செய்திகள் தொ. கா வில் நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்து உள்ளார். இவரின் இந்தி வெறிப் பேச்சிக்கு நானும் தக்க பதில் அளித்துள்ளேன்.   
மேலும் இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட தேசிய மொழிகள் குறித்த அறிவும் அவருக்கு இல்லை . இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லாத நிலையில் , இவர் வாய்க் கூசாமல் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்கிறார். ஆங்கிலமும் தமிழும் இரு கண்கள், இந்தி என்பது நெற்றிக் கண்ணாக இருக்கட்டும் என்று கூறுகிறார். 

தமிழ் படித்தால் எந்த வேலையும் கிடைக்காது . தமிழுக்கு எந்த உரிமையும் கிடையாது . நீதிமன்றத்தில் தமிழ் இல்லை , பாராளுமன்றத்தில் தமிழில் பேச உரிமை இல்லை . அதனால் நாம் எல்லாம் இந்தி கற்றுக் கொண்டால் வடநாட்டவன் போல் செழிப்பாக வாழலாம். இல்லையெனில் வடநாட்டான் நம்மை ஏமாற்றி விடுவான். வடநாட்டவன் தமிழகம் வரும் போது தமிழ் படிக்க சிரமப்படுகிறான். அதனால் தமிழ்நாட்டில் கட்டாயம் இந்தி பாடம் அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும் . அதே போல் தமிழர்கள் வடநாடு சென்றால் அங்கு இந்தி படிக்க நேரிடும் . அதனால் இங்கேயே தமிழர்கள் இந்தி படித்து வடநாடு செல்லலாம். இங்குள்ள தொடர்வண்டி நிலையத்தில் இந்தி பெயர் பலகை இல்லையெனில் வடநாட்டான் எவ்வளவு இன்னலுக்கு ஆளாகுவான். அதனால் இந்தியாவில் எங்கும் இந்தியை கட்டாயமாகப்பட வேண்டும். இந்தி மட்டும் தெரிந்தவன் தமிழ் நாட்டிற்கு செக்யூரிட்டி வேலைக்கு தான் வருகிறார்கள் . இந்தி தெரிந்தால் தமிழர்கள் வடநாட்டில் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம் . இந்தி தெரியவில்லை என்றால் அவன் இந்தியனே இல்லை . அவனுக்கு இந்தியாவில் வாழ்த் தகுதியும் இல்லை என்று அடிப்படை மனித உரிமை , மொழி உரிமையும் மறுக்கிறார். 

இவ்வாறு பல அபத்தங்களை பேசி தமிழக பள்ளிகளில் இந்திய கட்டாய பாடமாக திணிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார். இப்படியான ஆட்கள் தமிழகத்தில் பள்ளித் தலைவர்களாக இருந்தால் மாணவர்களின் கதி என்னவாகும் ? நம் மொழியின் நிலை என்னவாகும் ? மாணவர்கள் எவ்வாறு வழி நடத்தப் படுவார்கள் ? 

இணைப்பில் முழு காணொளி உள்ளது. இவர் பேசியதை நீங்களே கேளுங்கள். 


[vuukle-powerbar-top]

Recent Post