Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்காதே !

தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது மக்கள் செலுத்தும் வாக்குகள் தான். இந்தியா போன்ற போலி ஜனநாயக நாட்டில் மக்கள் புரட்சிக்கோ ஆயுத புரட்சிக்கோ அதிக அளவில் வாய்ப்பில்லாத நிலையில், மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள் தான். மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் அந்தந்த மொழியின மக்களை அந்தந்த மொழியின மக்களே ஆளும் வகை வழி வகுத்தது இந்திய அரசியல் சாசனம். தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆளவில்லை எனினும், பிற மாநிலங்களில் அந்த மொழிபேசும் மக்களே ஆட்சி செய்கின்றனர். தமிழகத்தை திராவிடர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் தெலுங்கு , கன்னடம் , மலையாளம் பேசும் மக்கள் அதிக அளவில் அரசுத் துறையிலும் , அரசியல் துறையிலும், திரைப்பட துறையிலும் காலூன்றி விட்டனர். ஏற்கனவே அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் வேற்றினத்தவரே ஆவர்.

இந்நிலையில் , இப்போது வரலாறு காணாத அளவில் வடநாட்டு மக்கள் தமிழகத்தில் குவிந்த வண்ணம் உள்ளார். இவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர் அல்லாத பீகாரிகள், வங்காளிகள், வடகிழக்கு மாநில மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கில் சென்னை மற்றும் தமிழக முக்கிய நகரங்களில் குடியேறி வருகின்றனர். இவர்களின் வரவால் தமிழகத்தின் சில பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மை மக்களாகவும் மாறிவிட்டனர்.

இதே நிலை தொடருமெனில் , தமிழகத்தில் உள்ள சட்டமன்ற , பாராளுமன்ற தொகுதிகளில் வடமாநில மக்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க நேரிடும். பெருவாரியாக வடமாநில வசிக்கும் பகுதிகளில் வடமாநில வேட்பாளரே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கும் செல்ல நேரிடும் . அடுத்த 50 ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்தில் வடமாநில தலைவர்களே பெருவாரியாக இருக்கக் கூடும். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மக்களின் பிரதிநிதித்துவம் சட்ட மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் இல்லாமல் போகும். ஏன் தமிழக முதல்வராக தமிழே தெரியாத வடநாட்டு அரசியல் தலைவரும் பொறுப்பேற்கலாம். அப்போது தமிழக மக்களின் உரிமை முற்றிலும் மறுக்கப்படும். தமிழர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக மாற்றப்பட்டு பின்பு மொழி ரீதியாக பண்பாட்டு ரீதியாக அழிக்கவும்படுவர். தமிழர் என்ற இனம் முழுமையாக அடிமைப்பட்டு விடும்.  

இந்த நிலை மாற வேண்டுமெனில் , தமிழகத்தில் வாக்குரிமை என்பது தமிழகத்தை பூர்வீகமா கொண்ட மக்களுக்கே வழங்கப்பட  வேண்டும். வெளிமாநில மக்கள் அவர்கள் சொந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தலில்   மட்டுமே வாக்கு செலுத்த முடியும் என்ற சட்டம் இயற்ற வேண்டும் . தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களும் அந்த மாநிலத்தை பூர்விகமாக கொண்டவராகத் தான் இருக்க வேண்டும், மண்ணின் மைந்தராகத் தான் இருக்க வேண்டும் என்ற தேர்தல் விதிமுறையும் இயற்ற வேண்டும். வெளி மாநில மக்களுக்கு எந்த வகையிலும் தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக்கூடாது. வெளிநாட்டில் இருந்து இந்திய குடியுரிமை பெற்று ஆங்கிலேயர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் இந்தியர்கள் ஏற்பார்களா ? நிச்சயம் ஏற்க மாட்டார்கள் . அப்படித் தான் வெளி இனத்தவர் , வேற்று மொழியினர் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்.

தமிழர் நலம் காக்கப்பட வேண்டும் என்றால் இதை உடனே தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களுக்கே வாக்குரிமை  கொடுப்பதோடு  குடும்ப அட்டைகளில் வெளிமாநில மக்களுக்கு தனி அடையாளம் இருக்கும் படி செய்தல் வேண்டும். அப்போது தான் தமிழக குடிமக்களுக்கும், வந்தேறிய குடிகளுக்கும் வேறுபாடு காண முடியும். இதை தமிழக அரசு உடனே நடைமுறைபடுத்த வேண்டும். தமிழர் அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகளின்  இந்த கோரிக்கையை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.


[vuukle-powerbar-top]

Recent Post