Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் அடையாளத்துடன் தமிழ் மென் ஆடைகள் வெளியீடு ! 

சென்னையில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் தமிழர் ஆடைகள் வெளியிடப்பட்டது. தமிழ் ஆடைகள் என்ற பெயரிலேயே இவை வெளியிட்டுள்ளோம். முதல் மென் உடையை ( டி சர்ட் ) தமுக தலைவர் அதியமான் தோழர் பெற்றுக் கொண்டார். மூன்று விதமான வடிவமைப்புகள் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது . 

தமிழர் நாட்டின் வரைபடத்தோடு கூடிய வள்ளுவர், பாரதியார் , மற்றும் செந்தமிழ்நாடு எனும் மூன்று ஆடைகள் வெளியிடப்பட்டது. நான்கு நிறங்களில் இவைகள் வெளிவந்துள்ளன. கருப்பு , வெள்ளை, கரு நீலம் (purple) நீளம் (Royal navy) ஆகிய நான்கு நிறங்களில் இவ்வாடைகள் வெளிவந்துள்ளன. பாரதியார் மட்டும் வெள்ளையிலும் , கருப்பு நிறத்தில் மட்டுமே வந்துள்ளன. மூன்று அளவுகளில் இவை உள்ளன . நடுத்தரம் ( Medium) , பெரியது (Large) மற்றும் மிகப் பெரியது (XL). தமிழர் அடையாளத்துடன் கூடிய, தமிழர் பெருமையை பறை சாற்றக் கூடிய ஆடையை தயாரித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினோம். 

ஆங்கில ஆடைகளை மட்டுமே சந்தையில் வளம் வருகிறது . அதிக அளவில் ஆங்கிலம் நமது தமிழர் அடையாளத்தை அழித்து வரும் நிலையில் தமிழர் அடையாளத்தை மென் ஆடைகள் மூலமாக நாம் மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த ஆடைகளை வெளியிட்டுள்ளோம். சென்னையை போன்ற நகரங்களில் இத்தகைய ஆடைகளை அணிந்து மக்கள் வளம் வந்தால் , நமது தமிழ் நாட்டின், தமிழ் மொழியின் , தமிழரின் பெருமையை எல்லோருக்கும் அறியச் செய்வதோடு ,பார்பவர்களுக்கும் தமிழர் என்கிற பெருமையான உணர்வை ஊட்டலாம். ஆதலால் தமிழ் நாட்டை, தமிழ் மொழியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாறன ஆடைகளை அணிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஆடைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிக் கொள்ளலாம். தொடர்புக்கு தமிழர் பண்பாட்டு நடுவம்: 9566224027





































[vuukle-powerbar-top]

Recent Post