Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


தமிழகத்தில் பிரபாகரன் படத்தை பயன்படுத்த தமிழக அரசு தடை. நாம் தமிழர் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.  

சென்னை திருவான்மியூரில் பெரியாரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திர்கு காவல் துறை  தடை ஆணை வழங்கி உள்ளது  ஆனாலும் சீமான் தலைமையில்  தடையை மீறி நாளை கூட்டம் நடக்கும் என நாம் தமிழர் கட்சி அறிவித்து உள்ளது. 

பிரபாகரன் படத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என கடலூர் மாநாட்டிற்கு தடை விதித்த தமிழக அரசு.
இப்போது நாம் தமிழரின் 17.09.2013 திருவான்மியூர் பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதித்துள்ளது.

காவல்துறையின் வரையறைகளை மீறி, நாம் தமிழர் அமைப்பினர் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகவும், அதன் தலைவர்களின் புகைப்படத்துடன் கூடிய விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாம் தமிழர் அமைப்பினர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளது.  

தமிழகத்தை பொறுத்தவரை ஈழத்தில் நடந்த இனப்படுகொலை மக்கள் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது . தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் ஆதரவு உள்ளது. அண்மையில் நடந்த மாணவர் போராட்டம் அதை உணர்த்தியது. தமிழக அரசு விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ விடுதலைக்கும் எதிராக செயல் பட்டால் , தமிழக மக்கள் ஆளும் அதிமுக அரசை தூக்கி எறியவும் தயங்க  மாட்டார்கள். இதை அறிந்தும் தமிழக அரசு இவ்வாறு செய்வது , அதிமுக தனக்கு தானே குழி வெட்டுவதற்கு ஒப்பாகும். 

தடையாணை கீழே இணைக்கப் பட்டுள்ளது




[vuukle-powerbar-top]

Recent Post