Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெயாவின் அலட்சிய அராஜக ஆட்சியில் தொடரும் போராட்டங்கள். காவல்துறையின் அடக்குமுறைகள்.  

ஒவ்வொரு முறையும் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்கும் போதும் பொது மக்கள் தங்களுக்கு ஏதோ ஒரு மாற்றம் வந்துவிட்டது என்று நினைக்கின்றனர். ஆனால் இக்கட்சிகள் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கட்சி தான் மாறியுள்ளது , தமிழகத்தில் அதே காட்டாச்சி தான் நடக்கிறது என்று நிரூபிக்கின்றன இந்த திராவிட அரசுகள். 

திமுக, அதிமுக அரசுகள் தொடர்ந்து தமிழினத்தை வஞ்சித்தே வருகிறது . தமிழர் அல்லாத இவர்கள் தமிழர்களின் இன்னல்களை கடுகளவும் புரிந்து கொள்வது இல்லை. உரிமைகளுக்காக போராடினால் உடனே அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்துவது அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் அல்ல. அதிகாரம் இல்லாத அராஜகம் மட்டுமே செய்யும் ஏவல் துறை தான் . இவர்கள் ஆட்சியாளர்களின் கைகூலிகளாக மட்டுமே செயல்படுகின்றனர் . இவர்களிடம் அன்பு , இறக்கம் , கருணை இவற்றையெல்லாம் எதிர்பார்ர்க முடியாது . கண் பார்வை இல்லாதவர் ஆனாலும் , அவர்களை 50 கி.மி ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில் இறக்கிவிட்டு 'செத்து ஒளிந்து போ' என்று சொல்லிவிட்டு வந்து விடுவர் காவல்துறை. போராடும் கண்பார்வை இல்லாத பெண்களிடமும் காவல்துறையின் தடியடி வன்முறை அடக்குமுறை நீள்கிறது. 

இன்னொரு பக்கம் மருத்துவ கல்லூரிக்கு பணம் கட்டி ஏமாந்து இப்போது கல்லூரி மூடிவிட்டதால் , தங்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என போராடும் மாணவர்களை ஈவு இறக்கமின்றி அடித்து துன்புறுத்தி கைது செய்கிறது காவல்துறை. மாணவர்களின் பெற்றோர்களையும்  விட்டு வைக்கவில்லை காவல்துறை. அவர்களுக்கும் அதே போன்ற வன்முறை அடக்குமுறை அடிதடி சிகிச்சை தான். 

இது இப்படி இருக்க , இலங்கையை தனிமைப் படுத்த வேண்டும் , இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, இன்னொரு புறம் அதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் மிதிவண்டி பேரணி நடத்தினால் , அதை தடுத்து நிறுத்தி மாணவர்களை கைது செய்வது, அவர்களையும் அடித்து துன்புறுத்துகிறது அரசின் ஏவல்துறை. 

ஈழத்திற்கு நாம் துணை நிற்கிறோம் என்பது போல காட்டிக் கொண்டு, பிரபாகரன் படம் வைத்து கூட்டம் நடத்தினால் , உடனே தனது ஏவல்துறையை வைத்து கூட்டத்தை தடுப்பதும் தமிழக அரசின் வாடிக்கையாகி விட்டது. 

இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பின் காவல்துறையை மட்டுமே வைத்து எல்லா போராட்டத்தையும் ஒடுக்கி , போராடும் மக்களுக்கு நீதி நியாயம் என்று எதுவுமே கிடைக்காமல் செய்வது தான் இந்த திராவிட கட்சிகளின் வேலையாக உள்ளது. இனியும் இக்கட்சிகள் தமிழகத்தை ஆண்டால், தமிழர்களின் எல்லா உரிமைகளும் இழந்து சொந்த நாட்டில் அனாதையாக வாழும் நிலைக்கே தள்ளப்படுவர். 

தமிழர்களே சிந்திப்பீர்!  இந்த தமிழின விரோத திராவிடக் கட்சிகளை முற்றிலும் துடைத்தெறியும் வேலையை நாம் இன்றிலிருந்தே தொடங்குவோம். நம் முழு பலத்தையும் பயன்படுத்தி தமிழருக்கான புதியதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். வாழ்க தமிழ் , வளர்க நற்றமிழர்! 
[vuukle-powerbar-top]

Recent Post