Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று சன் செய்திகள் தீர்வைத் தேடி நிகழ்ச்சியில் மும்மொழி பாடத்திட்டம் தமிழக பள்ளிகளில் தேவையா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நானும் பங்கு கொண்டேன். 

பிற மாநிலங்களில் மும்மொழிகள் கற்றுத் தரப்படுகிறது , தமிழகத்தில் மட்டும் இந்தி என்ற கட்டாய மூன்றாவது மொழி இல்லை . அதனால் தமிழகத்தில் மூன்றாம் கட்டாய இந்தி மொழி தேவையா என்ற கேள்வி எழுப்பினார் நிகழ்ச்சி தொகுப்பாளர். என்னோடு பேசிய தமிழ் அண்ணல் , அனைவருக்கும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் . ஆங்கிலம் பாட மொழியாகவும், இந்தி மூன்றாம் மொழியாகவும் இருக்கலாம் என்று கருத்து கூறினார். 

பிறகு பேசிய மெட்ரிக் பள்ளி சங்கத் தலைவர் நந்தகுமார் , முற்றிலும் தமிழ் மொழி,  இன விரோத கருத்துக்களை அளித்த வீசினார். அவர் சொன்ன கருத்துக்கள் சில, 

இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி, இந்தி தெரியாதவன் இந்தியனே அல்ல , இந்தி தெரியவில்லை என்றால் இந்தியாவில் வாழத் தகுதியற்றவராகி விடுவோம். மேலும் வடநாட்டு மக்கள் தமிழகம் வந்தால் இங்குள்ளவர்களுக்கு இந்தி தெரியாதால் அவர்கள் மிகவும் துன்பப் படுகின்றனர். இங்குள்ள தொடர்வண்டி பெயர் பலகைகளில் இந்தியை அழித்துவிட்டால் வட இந்தியர்கள் துன்பப்படுவார்கள் . தமிழ் தெரிந்தால் தமிழ்நாட்டில் மட்டும் தான் செக்யூரிட்டி வேலை பார்க்க முடியும். இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் செக்யூரிட்டி வேலை பார்க்கலாம். அதனால் தனியார் பள்ளிகள் ஏற்கனவே இந்தியை கட்டாய பாடமாக்கி வருகிறது. இந்தி இல்லையென்றால் இனி இங்கு யாரும் வாழ முடியாது.  இனி எல்லாப்  பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பாடமாக்க தமிழர்களின் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.  

இப்படிப் பட்ட மானமற்ற , சுயநலமிக்க, அறிவில்லாத  பண முதலைகள் தலைமையில்   4000 மெட்ரிக் பள்ளிகள் இயங்குகிறது என்பது வேதனை. இவர்கள் எப்படி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்று தெரியவில்லை. நேரம் குறைவாக இருந்த காரணத்தால் இவருக்கு முழுமையான பதிலடி கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இவர் கருத்துக்கு பதில் கருத்து பதிவு செய்தேன். மக்களின் மனநிலையும் இப்போது இந்திக்கு ஆதரவாக திருப்பி விட்டனர் இந்தி பிரச்சார சபை.  தமிழ் மொழியின் பால் எந்த ஆர்வமும் மக்களுக்கு இல்லை. இது மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் இனம் செல்வதை காட்டுகிறது.   நாளை காணொளியை பதிவிடுகிறேன். என்னென்ன கேள்விகள் என்னென்ன பதில்கள் அதில் உள்ளது என்று பாருங்கள் . 


இக்கருத்தை தொடக்கத்தில் இருந்தே நான் மறுத்து வந்தேன் . காரணம் ஒரு இனத்திற்கு தாய்  மொழி தான் கட்டாய பாடமாக இருக்க வேண்டும் தவிர வேறு மொழிகளை கட்டாயப்படுத்துவது தவறு என்று வாதம் முன்வைத்தேன். மூன்றாம் மொழிகள் விருப்பத்தின் பேரில் படிக்கலாம் என்று கூறினேன் அதுவும் இந்தி தான் இருக்க வேண்டும் என்றில்லை எனக் கூறினேன். 


[vuukle-powerbar-top]

Recent Post