Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இனியும் ஒரு தமிழர் சாகக் கூடாது. தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

ஒவ்வொரு முறையும் தமிழர்கள் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக போராடும் போது யாராவது ஒருவரை தமிழ்ச் சமுகம் இழக்க நேரிடுகிறது . முத்துக்குமார், செங்கொடி , விஜயகுமார் போன்ற பல உணர்வாளர்கள் ஆற்றாமையால் தன்னையே தீக்கு இரையாக்கி உள்ளனர். அப்படி உயிர் நீத்தாலும் இந்திய அரசு அதை பற்றியெல்லாம் சட்டை செய்வதில்லை. தமிழர்களின் போராட்டங்களை எல்லாம் தமிழக அரசோ இந்திய அரசோ மதிப்பதில்லை. இப்படி ஒரு நிலை இருக்க ஏன் தமிழர்கள் உயிர் துறக்க வேண்டும். நாம் பல வழிகளில் போராடி நம் உரிமைகளை பெற்றுக் கொள்வோம்.

இப்போது 14 வது நாளாக உண்ணா நிலையில் இருக்கும் தோழர் தியாகு ஐயாவின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. தோழர் தியாகு தமிழர்களின் அறிவு சார் சொத்து. அவரை இழப்பது இந்தியாவிற்கு மகிழ்ச்சியை தான் தரும். ஆனால் தமிழர்களுக்கோ அது மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை நாம் நிச்சயம் இழக்க முடியாது. அவரை காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அதனால் நாளை 15 ஆம் நாள் உண்ணா நிலைப் போராட்டத்தோடு தோழர் தியாகு தனது போராட்டத்தை முடித்துக் கொள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். வயதான நிலையில் அவர் உயிர் எந்த நேரத்திலும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் வைத்து நாளையோடு அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். நாம் அனைவரும் தோழர் தியாகு ஐயாவிற்கு பெரிய அழுத்தத்தை கொடுத்து அவரை உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிட செய்வோம். தமிழக மக்களாகிய நாம் போராட்டத்தை கையில் எடுப்போம் . தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை மக்களாகிய நாம் முன்னெடுப்போம்.

தோழரின் உண்ணா நிலையை முடிவுக்கு கொண்டு வர தமிழ் உணர்வாளர்கள் அனைவரும்.  
[vuukle-powerbar-top]

Recent Post