Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரித்தானிய பொருட்களை சாலையில் எரித்து வணிகர்கள் போராட்டம். (படங்கள்)

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதோடு காமன் வெல்த் மாநாட்டிற்கு துணை போகும் பிரித்தானியா நாட்டின் பொருட்களை கொளுத்தி போராட்டம் செய்தனர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை. இப்போராட்டத்திற்கு திரு வெள்ளையன் அவர்கள் தலைமை தாங்கினார் . இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியும் , மாணவர் கூட்டமைப்பும் ஆதரவு அளித்தனர். பிரித்தானிய நாட்டின் தயாரிப்பான ஆர்லிக்ஸ், அமாம் வழலை (சோப்பு) , ப்ரூ குளம்பித் தூள், அன்னபூர்ணா, நெச்ட்லே, யூனிலீவர் தயாரிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை தீயிட்டு எரித்தனர் வணிகர்கள். பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்கினால் தமிழகத்தில் பிரித்தானிய பொருட்களை புறக்கணிக்க வணிகர்கள் பரப்புரை செய்வோம் என்று முழங்கினர் வணிகர் சங்கத்தினர். இதன் மூலம் பிரித்தானிய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளனர் தமிழ்நாடு வணிகர் பேரவை. இனத்திற்காக போராடிய வணிகர் பேரவைக்கு பாராட்டுகள்


















[vuukle-powerbar-top]

Recent Post