Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்துத்வாவாதிக்கு எதிராக செயல்படும்  இந்துத்வாவாதிகள்!

திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதியான எஸ் வி சேகர் ஒரு தீவிர இந்துத்வாவாதி மற்றும்  இந்திய தேசப் பக்தர். மற்ற இந்துத்வா வாதிகளை போலவே இவருக்கு தமிழ், தமிழர்கள் , தமிழ் தேசியம் போன்றவைகள் பிடிக்காது. இவர் சென்னையில் ஒரு தனியார் ஆரிய இந்து மத கோவிலை நிர்வகித்தும் வருகிறார். ஒரு புராண இதிகாச கற்பனை கதாபாத்திரக் கடவுளை தன்னுடைய குல தெய்வமாக வணங்கியும் வருகிறார். பிறப்பால் நடைமுறையால் இவர் ஒரு பிராமணர். தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை முதன் முதலில் தமிழகத்தில் உருவாக்கிய பெருமை இவரையே சேரும். பிரமணர்களுக்கு தமிழக அரசு வேலைகளில் 6 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என போராடி வருபவர். இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம் இவர் எப்படிப்பட்ட தீவிர இந்துத்வாவாதி என்று.

இப்போது இவர் மீது வன்மத்தை காட்டி வருகின்றனர் தமிழகத்தை சேர்ந்த இந்துத்வாவாதிகள். உண்மையில் பிரமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருக்க முழு தகுதி படைத்தவர்கள். மனு தர்மமும் அதைத் தான் சொல்கிறது . பிரமணர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் சூத்திரர்களுக்கு இல்லை. பிரமணர்கள் தான் சமுதாயத்தில் மிக உயர்ந்த பிறப்பை பெற்றவர்கள் என்று விவேகானந்தரே கூறியுள்ளார். அப்படிப் பட்ட பிராமணர் குலத்தில் பிறந்த எஸ்.வி.சேகரை பிராமணர் அல்லாத இந்துத்வாவாதிகள்  தற்போது தாக்கி வருவது மிகப்பெரிய முரண்.

என்ன காரணம் என்று கேட்டால், எஸ் வி சேகர் மகாபாரதத்தில் மங்காத்தா என்ற அவர் இயக்கிய நாடகத்தில் மகாபாரதத்தை கொச்சை படுத்தி உள்ளாராம். ஒரு பிரமணரான எஸ்.வி.சேகருக்கு தெரியாத விடயத்தை பிராமணர் அல்லதா இந்துத்வாவாதிகளுக்கு எப்படி தெரிகிறது என்று புலப்படவில்லை. காரணம்  மகாபாரதம் ராமாயணம் போன்ற சமஸ்க்ரித்த நூல்கள் தலைமுறை தலைமுறையாக பிரமணர்களால் தான் கட்டிக் காக்கப் பட்டு வருகிறது. பிரமணர்கள் இல்லையென்றால் இந்துத்வா என்ற மதமே இப்போது இல்லை, நான்கு வேதங்களும் இல்லை. அப்படிப்பட்ட பிரமணர்கள் மனு தர்மத்தின் படி உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்களை கண்டிக்கவோ , தண்டிக்கவோ சூத்திரர்களுக்கு ஒருநாளும் அருகதை இல்லை. ஆனால் இங்கு நடப்பதோ தலை கீழ். மனு தர்மத்தின் அடிப்படையில் உருவான ஆரிய சமஸ்கிரத இந்துமதம் தழுவிய எஸ் வி சேகரை,  ஆரியம் தழுவிய சூத்திரர்களாக  கருதப்படும் தமிழர்கள் கண்டிக்கிறார்கள். இது இந்து மதத்திற்கே எதிரானது ஆகும்.

மேலும் மகாபாரதம் போன்ற கற்பனை நூல்கள் தமிழர்களின் நூல்களும் அல்ல. அதை தமிழர்கள் படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த கதைகளில் தமிழர் பண்பாடுகளும் இல்லை.  தமிழர்களுக்கு அந்நியமான எதிரான பல கருத்துக்கள் இந்த கற்பனைக் கதைகளில் உள்ளன. அதனால் தான் சித்தர்களும் , வள்ளலார் போன்ற அறிவர்களும் ராமாயணம் மகாபாரதம் போன்ற நூல்களை படிக்காதீர் என்று நமக்கு அறிவுறுத்தினர். அப்படி இருந்தும் சிலர் தமிழர்கள் தமிழில் இருக்கும் அழகான, அறிவுள்ள நீதி நூல்களை படிக்காமல் சமஸ்க்ரித பண்பாட்டை சித்தரிக்கும் ஆரிய நூல்களை படித்து ஆரிய இந்து மதத்தை தழுவு கின்றனர். மேலும் இவர்கள் தமிழை பயன்படுத்துவதும் இல்லை. தமிழகத்தில் உள்ள இந்துத்வா கொடிகளில் சமஸ்கிரத 'ஓம்' தான் காணப்படுகிறது. விரைவில் சமஸ்க்ரிதம் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக இவர்களை அடிமைப்படுத்தும். தமிழர் ஆன்மீக நெறியை அழித்து ஒழிக்கும் . இது அறியாமல் பல தமிழர்களும் ஆரிய இந்து மதத்தை பின்பற்றி மத வெறியர்களாக மாறி வருகின்றனர்.

அதன் உச்ச கட்டம் தான் ஆரிய இந்து மதத்தை கடைபிடிக்கும் எஸ்.வி.சேகர் போன்ற பிரமணர்களையே இவர்கள் தாக்குவது ஆகும். இந்துத்வாவாதிகள் இன்னொரு இந்துத்வாவாதியை தாக்குவது அவர்கள் கொள்கையை பலவீனப் படுத்தும். அதை அவர்கள் செய்யாமல் இருப்பது நலம்.

இந்துத்வா கொள்கையை தழுவிய தமிழ் இந்துக்கள் , விரைவில் இப்படியான பயங்கரபோக்கை ஊக்குவிக்கும் இந்துத்வாவை கைவிட்டு மீண்டும் தமிழர்களாக மாறி தமிழியத்தை தழுவுதல் வேண்டும் என்பதே தமிழியம் சார்ந்த தமிழ்த் தேசிய மக்களின் வேண்டுகோளாகும்.

படம் உதவி : ராஜன் செல்வராஜ். 
[vuukle-powerbar-top]

Recent Post