Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நவம்பர் 26 - பிரபாகரன் பிறந்த நாள். சமூக வலைத் தளங்களில் குவியும் வாழ்த்துகள் !! 

நவம்பர் 26 - தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளை கொண்டாடுவதற்கு உலகத் தமிழர்கள் கடந்த ஒரு வார காலமாகவே ஆயத்தமாகி வந்தனர். தமிழர் நலன் சார்ந்த பல கட்சிகள் இந்த நாளை தமிழின எழுச்சி நாளாக கொண்டாடுகின்றன. இருப்பினும் தமிழக அரசு பிரபாகரன் பிறந்த நாளை யாரும் கொண்டாடக் கூடாது என்றும் , பிரபாரகன் படத்தை பொது இடங்களில் வைக்கக் கூடாது என்று காவல்துறைக்கு கட்டளையிட்டு உள்ளது. என்ன தான் தமிழக அரசு தடை சொன்னாலும் , பிரபாகரன் தமிழினத்தின் தலைவர் , அவர் பிறந்த  நாளை நாங்கள் கொண்டாடாமல் இருக்க மாட்டோம் என்று பல தமிழ் கட்சிகள் , இயக்கங்கள் , அமைப்புகள்  ஏற்கனவே இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். 

சமூக வலைத் தளங்களின் பிறந்த நாள் வாழ்துக்கள் ! 

தமிழக இணைய பயன்பாட்டாளர்கள் , முகநூல், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் பிரபாகரன் படங்களையும் செய்திகளையும் அதிக அளவில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். பலர் பிரபாகரன் படத்தை தங்கள் முகப்பு படமாக மாற்றி உலா வருகின்றனர். பல இணைய நண்பர்கள் ஒன்றாக கூடி பிரபாரகன் அகவை 59 என்று வாசகம் எழுதிய கேக் வெட்டி இந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர். வலைத்தள பயன்பாட்டாளர்கள் பெரும்பான்மையானவர்  தேசிய தலைவருக்கு வாழ்த்துகள் என்று பல செய்திகளை பகிர்ந்துள்ளனர் . தமிழகத்தை பொறுத்தவரை , தற்காலத்தில் எந்த ஒரு தலைவருக்கும் இது போல் பிறந்த நாள் வாழ்த்தை சொல்லி கொண்டாடுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் புலிகளின் தலைவர் இப்போது ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவாரக உருவெடுத்து உள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மையாகி விட்டது. தேசிய தலைவரை புறக்கணித்து இனி தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையம் வந்து விட்டது என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

பிரபாகரன் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் என்ற வாசகங்கள் சமூக வலைத் தளங்கள் மட்டுமின்றி இப்பொது பொது வெளியிலும் காணப்படுகிறது . 




[vuukle-powerbar-top]

Recent Post