Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சேனல் 4 குழுவிடம் குவிந்த யாழ் மக்கள் !  இந்திய ஊடகங்கள் மேல் இல்லாத நம்பிக்கை ஈழத் தமிழர்களுக்கு சேனல் 4 ஊடகத்தின் மேல் உருவாகி உள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமேரூன் சென்றிருந்த போது அவரை காண காட்டிய அதே அக்கறையை பொதுமக்கள் சனல் 4 ஊடகத்தினர் மீதும் காட்டியுள்ளனர். சேனல்  4 யிடம்  தமது பிரச்சினையை கூறினால் அது பிரித்தானிய பிரதமருக்கு உரியவகையில் தெரியப்படுத்தப்படும் என்று நம்பிக்கையை அவர்கள் வெளிக்காட்டினர். காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பில்  மனுக்களை பிரித்தானிய பிரதமரிடம் நேரடியாக கொடுக்க முடியாத நிலையில் சேனல் 4 குழுவிடம் மனுக்களை கையளித்தனர் தமிழர்கள்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது. போர்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் தமிழக இந்திய ஊடகங்கள் உண்மையை உள்ளபடி மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அருகிலேயே  இருந்தாலும் இந்த ஊடகங்கள் இந்தியா சிங்கள அரசின்  நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செய்திகளை ஒருதலைப் பட்சமாக ஒளிபரப்பின.  போர் நடந்த போதும், போர் முடிந்த பின்பும் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரத் தக்க எந்த செய்தியையும் இந்திய ஊடகங்கள் வெளிபடுத்த வில்லை.

இந்தியாவில் ஹெட் லைன்ஸ் டுடே என்ற தொலைக்காட்சி மட்டும் தங்களால் முடிந்த அளவிற்கு இனப்படுகொலை குறிந்த செய்தியை வெளியிட்டனர் . இருப்பினும் அவர்களது செய்தி இந்திய அரசை பெரிதும் பாதிப்படைய செய்யவில்லை. தமிழக ஊடகங்கள் பெரிய முயற்சிகள் எடுக்காத காரணத்தால் தமிழக தமிழ் மக்களிடையே கூட இலங்கையின் இனப்படுகொலை குறித்த செய்தி பரவவில்லை.

இப்போதும் தினத்தந்தி தொலைக்காட்சி தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் அளவில் செய்திகளை பகிரவில்லை. மாறாக ஈழ விடுதலையை எதிர்க்கும் கருணா, கே.பி போன்றோரின் பேட்டியை ஒளிப்பரபுகிறது. இது ஈழப் போராட்டத்தை பின்னுக்கு தள்ளும் விதமாகவே அமைந்துள்ளது . ஒரு தமிழ்த் தொலைக்காட்சி இவ்வாறு நடந்து கொள்வது தமிழர்களை வருத்தமடைய செய்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க, இங்கிலாந்தில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி மிகவும் திறமையாக இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை உலகிற்கு போட்டு காட்டியது. இந்த ஊடகத்தின் செயல்பாட்டால் இலங்கை மட்டுமல்ல இந்திய அரசும் திக்குமுக்காடியது. இதுவரை வெளிவராத இலங்கையின் குற்றங்களை  வெளியே கொண்டு வந்தது சேனல் 4 நிறுவனம். இது இலங்கையிடம் கிலியை ஏற்படுத்தியது.

மனிதாபிமான முறையில் , தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ந்து இலங்கையின் போற்குற்றங்களை அம்பலப் படுத்தி வருகிறது சேனல் 4 நிறுவனம். இந்த செயல்பாட்டால் இப்போது ஈழத் தமிழர்கள் சேனல் 4 நிறுவனத்தை வேறு யாரையும் விட பெரிதாக நம்புகின்றனர். விலை போகாத ஊடகமான சேனல் 4 நிறுவனம் தான் இப்போதைக்கு தமிழர்களின் ஒற்றை நம்பிக்கையாகும். அதனால் தான் யாழ் வந்த சேனல் 4 குழுவிடம் தமிழ் மக்கள் குவிந்து, குழுவினரை ஆரத் தழுவி , மலர் மாலை அணிவித்து அவர்களிடம் தங்கள் கோரிக்கை மனுவை கையளித்தனர்.

ஒரு அரசு செய்ய முடியாத காரியத்தை சேனல் 4 நிறுவனம் செய்துள்ளது இதன் மூலம் தெரிகிறது. யாழ் மக்களும் இப்போதைக்கு சேனல் 4 நிறுவனத்தை மலை போல் நம்புகின்றனர் . இந்திய ஊடகங்கள் யாழ்ப்பானம்  சென்றாலும் அங்குள்ள தமிழர்களுக்கு இந்திய ஊடகங்கள் மேல் நம்பிக்கை வருவதில்லை. மாறாக இந்த ஊடகங்கள் மேல் பயம் மட்டுமே வருகின்றது. காரணம் இந்திய ஊடகங்கள் இலங்கையுடன் சேர்ந்தே செயல்படுகின்றன.

தமிழர்கள் தற்காலத்தில் சேனல் 4 நிறுவனத்திற்கு பெரும் நன்றிகடன் பட்டுள்ளனர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. வரும் காலத்தில் தமிழர்களுக்கு சிறிது அளவு நீதி கிடைக்கும் என்றால் அது சேனல் 4 ஊடகத்தின் மூலமாகத் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சேனல் 4 நிறுவனத்திற்கு நம் மனமார்ந்த நன்றியை பகிர்வது தவிர வேறேதும் செய்ய இயலாது.


[vuukle-powerbar-top]

Recent Post