Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டேவிட் கமரூன் யாழ் வருகை. இந்திய இலங்கையின் கூட்டுச் சதி அம்பலம் ! 

காமன் வெல்த் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். சில நாடுகள் இம்மாநாட்டை புறக்கணித்தன. சில நாட்டு பிரதமர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்தனர் . பிரித்தானியா பிரதமர் மட்டும் தான் இம்மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் , கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேசப் போவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் கொழும்பு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ,  அங்கிருந்து தனி விமானம் மூலமாக யாழ்பாணம் சென்றார். யாழ்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட  தமிழர்களை சந்தித்து உரையாடினார். மேலும் யாழ் வந்த காமரூனிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை தர ஒரு பெருங் கூட்டமே காத்திருந்தது . போரினால் பாதிக்கப்பட்ட ஏராளமான தாய்மார்கள் , தங்கள் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணீர் மல்க கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். காமரூனிடம் கோரிக்கை வைக்க காத்திருந்த தாய் மார்களை கண்மூடித் தனமாக தாக்கினர் சிங்கள காவல் துறை. காவல்துறையில் அடுக்குமுறை மீறி பல பெண்கள் டேவிட் காமரூனின் ஊர்தியை முற்றுகையிட்டனர் . சிலர் அவரிடம் நேரடியாக மனு கொடுத்து தங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு வேண்டினர். போர் முடிந்த பின்பும் தமிழர்களின் அவலம் தீரவில்லை என்பதை தமிழர்கள் அவரிடம் பதிவு செய்தனர் . தமிழர்களின் இந்த பரிதாபமான நிலையை கருத்தில் கொண்ட டேவிட் கமரூன் இது குறித்து இலங்கை அரசிடம் பேசி நல்ல தீர்வை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். மேலும் ஈழத் தமிழர்கள் சொல்லவொண்ணா துரியத்தில் உள்ளனர் , அவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை , அவர்களுக்கு நீதியும் கிடைக்க வில்லை என்பதை கமரூன் தெரிவித்தார். 

காமரூனின் இந்த வருகை உலக செய்தியாகியது . ஈழத் தமிழரின் இந்த கதறல் கமரூன் மூலமாக உலக ஊடகங்களில் ஒலித்தது. இது நாள் வரை உலகை ஏமாற்றி வந்த இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு டேவிட் கமரூன் வருகை திருடன் காலில் தேள் கொட்டுவது போலானது. இந்தியாவும் , இலங்கையுடன் சேர்ந்து தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு , தமிழர் பகுதிகளில் சாலை போட்டு கொடுத்ததாகவும் , மேம்பாட்டுப் பணிகள் செய்துள்ளதாகவும், தமிழர்கள் அனைவருக்கும் வீடு கட்டு கொடுத்துள்ளதாகவும் , ஈழத் தமிழர்கள் நலமுடன் வளமுடன் வாழ்வதாகவும் தமிழக தமிழர்களையும் , உலக நாடுகளையும் ஏமாற்றி வந்தது . 

இலங்கையின் கபட நாடகத்திற்கு துணை நின்றது இந்தியா. இலங்கையின் சதியில் தானும் உடந்தையாக இருந்தது இந்திய அரசு. இந்திய அரசின் ஏற்பாட்டில் நடப்பது தான் இந்த காமன் வெல்த் மாநாடும் கூட. இம்மாநாட்டின் மூலம் உலக நாடுகளை சமாதனப் படுத்திவிடலாம், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைந்து இலங்கை அரசை காப்பாற்றி விடலாம் என்று எண்ணியது இந்திய அரசு. ஆனால் டேவிட் கமரூன் வருகை இந்த திட்டங்கள் அனைத்தையும் பொடிப்பொடியாக்கியது. இப்போது உலகிற்கே ஈழத் தமிழர்களின் அவலம் தெரிந்து விட்டது . மனித உரிமை மீறல்கள் இன்னும் தமிழர் பகுதியில் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

இனியும் இந்திய அரசு இலங்கையுடன் கூட்டு சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போகாமல், இலங்கை மீது சர்வதேச போர்குற்றம் மற்றும்  இனப்படுகொலைக்கான  விசாரணை மேற்கொள்ள ஆவன செய்தல் வேண்டும். இல்லையெனில் இந்தியாவும் இந்த இனப்படுகொலைக்கு துணை போன காரணத்தால் விசாரிக்கப்பட வேண்டிவரும். உலகத் தமிழர்கள் இந்தியாவின் சதியை உலக அரங்கில் அம்பலப்படுத்தி , இந்தியாவில் இருந்து தமிழ்நாடு  பிரிந்து போகும் சூழலை உருவாக்க நேரிடும். தமிழக மீனவர்களை பாதுகாக்காமல், இலங்கையை தட்டிக் கேட்கலாமல், ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தராமல் இனியும் இந்தியா மௌனம் சாதிக்க முடியாது.   இதற்கு மேலும் இந்தியா அசிங்கப்படுவதற்கு முன்னால், இந்தியாவே முன்வந்து தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்,  நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும். 


[vuukle-powerbar-top]

Recent Post