Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் வரலாற்று சிறப்பு மிக்க திருக்குறள் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள் நடத்த உறுதுணையாக இருந்த அண்ணன்கள், தோழர்கள் அனைவருக்கும் நாம் நன்றி பகிர்கிறோம்! 

இடிந்தகரை மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் அலைக் குழுமம் சார்பாக திருக்குறள் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

குழந்தைகளிடம் திருக்குறள் அறிவும் , தமிழ் உணர்வும் செழித்தோங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இப்போட்டிகளை நடத்தினோம். அண்ணன் உதயகுமார் பேசும் போது அவர் மாணவர்களுக்கு சொன்னது, தமிழர்கள் பைபிள் , குரான், பகவத் கீதை படிப்பதை காட்டிலும் ஒவ்வொருவரும் திருக்குறள் நூலை அவசியம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். திருக்குறளே தமிழர்களுக்கு வேத நூலாகும் என்றும் கூறினார்.  

தமிழ் பிள்ளைகள் ஒவ்வொருவரும் திருக்குறள் அறிவு பெற்றிருக்க வேண்டும் . அப்போது தான் வளமான, ஒழுக்கமான  தமிழ் சமுதாயம் உருவாகும். அந்த வகையில் இந்த போட்டிகள் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைத்திருக்கும் என்று நம்புகிறோம். 

இப்போட்டிகள் இடிந்தகரையில் நடக்க பெரிதும் உதவிய அண்ணன் சுப. உதயகுமார், அண்ணன் முகிலன், அண்ணன் புஷ்பராயன், தோழர் மில்டன், தோழர் கெபிஸ்டன், அருட்தந்தை ஜெயகுமார், மைபா மற்றும் ஒளிப்படக் கருவி உதவி செய்த தோழர் அமிர்தராஜ் ஸ்டீவன் அனைவருக்கும் நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

அடுத்ததாக இப்போட்டிகளை சென்னையில் இருந்து இடிந்தகரை வரை சென்று நடத்திய நம் அமைப்பின் தோழர்கள் , அலைக்  குழும நண்பர்கள் மயூரன், கோபிநாத், விவேக் சாரதி, சக்திராஜ், ஏஞ்சல் கிளாடி, நர்மதன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு நம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்க தங்களால் முடிந்த நிதி உதவி அளித்த பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் ஆர்வலர்களுக்கு நம் நடுவத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post