Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நமது மண் நம் உரிமை. இதை யாருக்கும் எதற்காவும் விட்டுக் கொடுக்கக் முடியாது .

விவசாய  நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம். அனுமதி அளித்தது தமிழக விவாசயிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக விவசாய  நிலங்களை ஆக்கிரமித்து பெரும் குழாய்களை நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனம் பதித்து வந்தது. அப்போது தமிழக அரசு கெயில் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளித்து குழாய்களை விளை நிலங்களில் பதிக்க ஆதரவு அளித்தது. இதை தடுக்க வந்த அப்பாவி விவசாயிகளை காவல்துறையை வைத்து ஒடுக்கியது தமிழக அரசு. 

இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்தனர் . அதை தொடர்ந்து தமிழக அரசு கெயில் நிறுவன குழாய் பாதிக்கும் திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டது. நெடுஞ்சாலைகள் ஓரமாக பதியுமாறு கேட்டுக் கொண்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் நீதி மன்றத்தை நாடியது. நீதி மன்றத்தில் கெயில் நிறுவனம் , தாங்கள் ஏற்கனவே 2000 கோடிகள் செலவழித்து விட்டோம், மேலும் தமிழக அரசு அனுமதியுடன் தான் நாங்கள் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டோம் , இப்போது எங்கள் திட்டத்தை நிறுத்தச் சொல்வது நியாயம் இல்லை என்று வாதாடியது. கெயில் நிறுவனத்தில் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் , இப்போது கெயில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்து உள்ளது. தமிழக அரசு இந்த குழாய் பாதிக்கும் திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது . 

விவாசயிகளுக்கு எதிரான இந்த தீர்ப்புக்கு முழு காரணம் தமிழக அரசு தான் . முன்னர் குழாய்களை பதிக்க அனுமதி அளித்து விட்டு பின்னர் பிரச்சனை வந்தவுடன் அனுமதி மறுத்துள்ளது. இப்படியான பிரச்சனை வரும் என்று தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரியாதா? தமிழக அரசுக்கு இந்த குழாய் பதிப்பு மூலமாக சில வருவாய் இலாபங்கள் உள்ளன என்ற அடிப்படையில் அனுமதி அளித்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட போவது விவசாயிகள் தானே ? அதை  ஏன் தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை? கூடங்குளம் அணுஉலை விடயத்திலும் இவ்வாறே தமிழக அரசு நடந்து கொண்டது. மக்களுக்கு விரோதமான செயல் திட்டங்களை நடுவண் அரசு கொண்டு வரும் போது அதை தடுப்பதற்கு தான் மாநில அரசு உள்ளது. கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களின் அந்தந்த அரசுகள் மக்களுக்கு ஆதரவாக பல நடுவண் அரசின் திட்டங்களை தடுத்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழக அரசு நடுவண் அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு துணை போகிறது. 

கூடங்குளம் அணுஉலை, நியூட்ரினோ, கெயில் குழாய், மீத்தேன் திட்டம், அணுக்கழிவு சேகரிக்கும் திட்டம் என பல திட்டங்களை நடுவண் அரசு தமிழகத்தில் செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களால் தமிழக பாட்டாளி மக்கள்   பெரிதும் பாதிப்பு உள்ளாகிறார்கள் . இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய திட்டங்கள் ஆகும். ஆனாலும் கடந்த 40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட இரு பெரும் திராவிட கட்சிகள் , நடுவண் அரசுக்கு ஆதரவாக தமிழகத்தை கூறுபோட சம்மதித்த்து வந்துள்ளன என்பது வேதனையான விடயம். இதனால் தமிழகம் அந்நிய நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிவிட்டது. தமிழக தமிழர்களின் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு உள்ளது. 

இனியும் இப்படியான நிலையை நாம் அனுமதிக்க வேண்டுமா ? மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா ? தமிழக மண்ணின் உரிமையை அந்நியர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு தமிழர்கள் சொந்த நாட்டில் அகதியாக வாழவேண்டுமா ? தமிழக நிலங்கள் , வளங்கள் அனைத்தும் தமிழருக்கே சொந்தம் . அதை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்துவதோடு, தமிழகத்திற்கு தேவையான நில உரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில்  நிறைவேற்ற தமிழர்கள் முயற்சி எடுக்க வேண்டும். விவசாய நிலங்களின் உரிமையை பாதுகாக்கும் சட்டத்தையும்  நிறைவேற்ற கோரிக்கை எழுப்ப வேண்டும் . நடுவண் அரசின் எந்த திட்டங்களையும் மக்கள் விருப்பமில்லாமல் தமிழகத்தில் நிறைவேற்ற அனுமதி அளிக்கக் கூடாது. தமிழக நிலங்கள் மற்றும் வளங்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சட்டதிருத்தம் தேவை. அதற்கு தமிழக கட்சிகள் , இயக்கங்கள் ஒன்று சேர்ந்து போராட முன்வர வேண்டும் . அறிவார்ந்த தமிழ் சமூகமே  எதிர்கால சந்ததியை பாதுக்காக முடியும். இப்போது நாம் விழிக்கவில்லை எனில் , நம் மண் அந்நிய பெருநிறுவன வியாபாரிகளின் கொள்ளைக் கூடாராமாக மாறி விடும். 

விழித்தெழு தமிழகமே ! இழந்தது போதும் , இனி நம்மை நாமே பாதுகாக்கும் வழியை காண்போம். நமது மண் நம் உரிமை .இதை யாருக்கும் எதற்காவும் விட்டுக் கொடுக்கக் முடியாது . சிந்திப்பீர் செயல்படுவீர் . 


[vuukle-powerbar-top]

Recent Post