Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏற்காடு இடைத் தேர்தல். எதிரிகள் களமாட வேடிக்கை மட்டுமே பார்க்கும் தமிழர்கள் !

இப்பொது நடக்க இருக்கும் ஏற்காடு இடைத் தேர்தல் பரப்புரைக்கு அதிமுக தலைவர் அங்கு சென்றுள்ளார் . அவரை வரவேற்க பல்லாயிரம் மக்கள் அங்கு திரண்டுள்ளனர் . பெண்கள் தலையில் முளைப்பாரி வைத்து வரவேற்று உள்ளனர்.  தாரை தப்பட்டை முழங்க பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்ப்பு கொடுத்துள்ளனர் ஏற்காடு தொகுதி மக்கள் . ஆனால் தேர்தலுக்கு மட்டுமே அங்கு செல்லும் ஜெயா அதன் பின்பு அந்தப் பக்கம் கூட எட்டி பார்க்க மாட்டார் என்பது நாம் அறிந்ததே . மேலும் வாக்குகளை என்ன விலை கொடுத்ததும் வாங்க தயாராக உள்ளது அதிமுக. இந்த கட்சியோடு களத்தில் நின்று போட்டியிடுவது அதற்கு சமமான ஊரை ஏமாற்றும் மற்றுமொரு திராவிடக் கட்சியான திமுக . திமுகவும் தனது பங்கிற்கு வாக்குகளை விலை பேச களமிறங்கி உள்ளது . இதில் யார் அதிக தொகை , அதிக கவர்ச்சித் திட்டங்களை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் எனத் தெரிகிறது . ஆனால் அதே ஏற்காட்டில் நாளை நடுவண் அரசு கணிமவளம் இருக்கிறது அந்த மலையை குடைய வேண்டும் , எல்லோரும் வெளியேற வேண்டும் என்று கூறினால் அதற்கும் இந்த திராவிட கட்சிகள் சம்மத்தித்து மக்களுக்கு எதிராகவே செயல்படும்.

இந்த மக்கள் விரோத கட்சிகளை எதிர்த்து தமிழின நலம் சார்ந்த கட்சிகள் கூட்டாக ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு இருக்கலாம் . குறைந்த பட்சம் மக்களின் கணிசமான வாக்குகளை பெற்றிருக்கலாம் . இது அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்திருக்கும் . மதிமுக , நாம் தமிழர் கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலே நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் . ஆனால் இப்போது இன எதிரிகளை போட்டியிட வைத்து இனம் சார்ந்த கட்சிகள் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. வரும் காலங்களில் இந்த மக்கள் விரோத திராவிடக் கட்சிகளை வீட்டிற்கு அனுப்பும் வேலையை நாம் செய்ய வேண்டுமெனில் தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் தங்கள் சிறு சிறு பேதங்களை களைந்து கைகோர்க்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பமாக உள்ளது. இதை இவர்கள் செய்யவில்லை என்னில் மீண்டும் மீண்டும் தமிழினம் எதிரிகளிடம் தோற்கும். எண்ணித் துணிவோம் !!  
[vuukle-powerbar-top]

Recent Post