Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்ற ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளில் தமிழர் பண்பாட்டு நடுவம் குழு திருவண்ணாமலை சென்று தமிழ் பணியில் ஈடுபட்டது. பிள்ளைகளுக்கு திருக்குறள் போட்டி நடத்தி இனிப்புகள் வழங்கினோம். மலை சுற்ற வந்த பக்தர்களுக்கு தமிழர் பண்பாட்டை கடைபிடிக்கும் வகையில் பல்லாயிரம் துண்டறிக்கை கொடுத்தோம். தானிகளில் பேருந்துகளில் தமிழில் பேசுவோம் தமிழராய் இணைவோம் என்ற பசை ஒட்டிகளை ஒட்டினோம். பல்லாயிரம் தமிழர்களுக்கு தமிழுணர்வை ஏற்படுத்தினோம். 

தமிழர்களின் தொன்மையான திருவிழாவான இந்த கார்த்திகை ஒளிவிளக்கு திருவிழா உண்மையில் எந்த மதத்தையும் சாராது ஒளி விளக்கை ஏற்றி வழிபடும் விழாவாகும். இறைவன் ஒளி உருவாக எவ்வுயிர்க்கும் உறவோங்கி உள்ளான் என்பதை காட்டுவதே இந்த திருவிழாவின் நோக்கமாகும். 

எனினும்  இதன் பின்னணியில் பல்வேறு ஆரியக் கட்டுக் கதைகளும் பிற்காலத்தில் பின்னப்பட்டது. திராவிடர்களும் ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் தமிழர் விழாவையும் எதிர்க்கத் தொடங்கினர் . தமிழர் மதத்தின்  நோக்கம் ஆரியத்தை நீக்கி அதை சாராது தமிழர் திருவிழாவை கொண்டாடுவதாகவும். ஒவ்வொரு தமிழர் விழாவிலும் ஆரியம் கலந்துள்ளது.. அவற்றை நீக்கினாலே தமிழர் விழா தனித்து காணப்படும். ஒவ்வொரு இல்ல நிகழ்விலும் ஆரியத்தை நீக்கி தமிழர் பண்பாட்டை , பழக்கத்தை மீடடெடுக்க வேண்டும். தமிழில் வழிபாடு செய்தல், தமிழில் பெயர் வைத்தல் , தமிழில் திருமணம் செய்தல் போன்ற பழக்கத்தை நாம் ஏற்படுத்துதல் வேண்டும். 

ஆரியத்தை போலவே திராவிடமும்  தமிழர் பண்பாட்டையும் எதிர்க்கிறது. தமிழ் மொழியையும் எதிர்க்கிறது . ஆகவே தமிழர்கள் திராவிட ஆரிய சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை பேணுதல் வேண்டும். சாதி மத பேதமில்லாமல் தமிழர்களாக ஒற்றுமையுடன் நம் மொழி , பண்பாடு, கலைகள்  இவற்றை  மீட்டெடுக்க வேண்டும். இது போன்ற மாபெரும் ஒன்று கூடலில் தமிழர்களின் மொழியை, அடையாளத்தை , பண்பாட்டை ஒருவருக்கு ஒருவர் பகிர்தல் வேண்டும். அவ்வாறு தொடர்ச்சியாக நாம் செய்வோம் என்றால் இந்துத்வா என்னும் ஆரியத்தையும் , திராவிடத்தையும் நாம் வீழ்த்தி தமிழினத்தை தமிழோடு அடுத்த தலைமுறைக்கு நாம் செம்மையாக நகர்த்தி செல்லலாம்.  வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் ! சுடர்க தமிழ் நாடே ! 
[vuukle-powerbar-top]

Recent Post