Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவில் பல்வேறு தேசிய மொழிகள் இருந்தாலும் இந்தியை மட்டும் இந்திய அரசு தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடமும் திணித்து வருகிறது . இது அடிப்படை மொழி உரிமை மீறலாகும் . இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் முலாயம் சிங் யாதவின் இந்தி வெறி பேச்சு இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேச தடை விதிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் இடாவா நகரில், ’இடாவா இந்தி சேவா டிரஸ்ட்’ சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தி மொழி வளர்ச்சியில் இந்திய அரசியல் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். மக்களிடம் இந்தியில் வாக்கு சேகரிக்கும் அவர்கள், பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். அதற்காக நான் ஆங்கிலத்துக்கு எதிரி அல்ல. ஆனாலும் இந்த நடைமுறையை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தாய்மொழிகள் வளர்ச்சியடைந்துள்ளன. அதைப்போல நமது தாய் மொழியான இந்தி மொழியையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல இதுவே தகுந்த நேரம் ஆகும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் மாநில மொழியோடு, இந்தி மொழியையும் ஊக்குவிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேச தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் ஒவ்வொரு தேசிய இன மக்களின் பிரதிநிதிகளும் அவரவர் தாய் மொழியில் கருத்துகளை கூறலாம் என்ற விதி உள்ளது . இருப்பினும் இந்தி அல்லாத உறுப்பினர்கள் அவர்கள் மொழியில் பேச வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும் . இந்தி உறுப்பினர்கள் மட்டும் எந்த அனுமதியும் வாங்கத் தேவையில்லை . இதுவே மொழி உரிமை மறுக்கப் படுவதற்கு நல்லதொரு சான்றாகும் . மேலும் பாராளுமன்றத்தில் நடுவண் அமைச்சர்கள் அவர்கள் தாய் மொழியில் பேச இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை இன்னும் சரி செய்யாத நிலையில் முலாயம் சிங் அவரது தாய் மொழியான இந்தியில் தான் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது கண்டனத்திற்கு உரியதாகும் . இது அவருடைய இந்தி வெறியை காட்டுகிறது . இந்திய அரசு இனி அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்ட

[vuukle-powerbar-top]

Recent Post