Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2013 - தமிழர் பண்பாட்டு நடுவம் கடந்து பாதை. ஒரு வெற்றிப் பயணம் !

தமிழர் பண்பாட்டு நடுவம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது . நம் அமைப்பு ஒரு போராட்டக் குழு இல்லையென்றாலும் அறிவுசார் தளத்தில் நமது அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு கருத்தியில் ரீதியாக , ஊடகத்தின் மூலமாக பெரும் பலம் சேர்த்து,  பரப்புரை செய்து வெற்றியும் ஈட்டியுள்ளோம். ஒரு சிறு அமைப்பால் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வியை முறியடித்து சிறு எறும்பும் பெரிய யானைக்கு பெரும் தொல்லையாக முடியும்  என்பதை எங்கள் செயல்களின் மூலமாக 2013 ஆம் ஆண்டில் நிரூபித்தோம். எங்கள் வெற்றிக்கு முழு காரணம் தமிழ் மக்களாகிய எங்கள் உறவுகள் நீங்களே ! வரும் ஆண்டிலும் இதை விட வீரியமாக நாங்கள் செயல்படுவோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். தமிழ்த் தேசியப் பாதையில் ஒரு சிறிதும் நழுவாமல் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் எங்களால் ஆனா அனைத்து நன்மைகளும் செய்வோம் என்பதை உறுதி படுத்துகிறோம்.

2013 ஆம் ஆண்டு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சில சில முக்கிய நடவடிக்கைகள் .

தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு கட்டாயம் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற பரப்புரை செய்து சுமார் 500 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள் , பன்னாட்டு உணவகத்தில் தமிழில் பாடல்கள் ஒலிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது

வங்கிகளில் தமிழ் இல்லை என்ற குறையை சுட்டிக் காட்டி எச் டி எப் சி வங்கியில் தமிழில் படிவங்கள் கொண்டு வந்தோம்.

வானூர்தி நிலையத்தில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற பெயர் பலகையை அகற்ற வைத்தோம் . மேலும் வானூர்தி நிலையத்தை முழுமையாக தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தமிழ்ப் படுத்த கோரிக்கை வைத்து அதை ஓரளவிற்கு நிறைவேற்றி உள்ளோம்.

தென்னக தொடர்வண்டித் துறைக்கு கோரிக்கை வைத்து தமிழ் மொழி புறக்கணிப்பை சுட்டி காட்டினோம். விரைவில் தென்னக தொடர்வண்டித் துறையில் தமிழ் மொழியை கொண்டு வருவோம்.

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும் என்று சட்ட மன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அதற்காக அனைத்து தமிழக கட்சிகள் அமைப்புகளிடம் இருந்து கையெழுத்து பெற்று தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்றோம்.

தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அனைத்து கட்சி இயக்கங்களுடன் சேர்ந்து கூட்டறிக்கை வைத்தோம் . இதனால் தமிழகத்தில் இப்படம் திரையிடப்படவில்லை. இது தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

ஏஜிஎஸ் திரையரங்கில் கட்டாய இந்திய தேசிய கீதத்தை தடை செய்யுமாறு கோரிக்கை வைத்தோம். மாணவர்களின் துணையுடன் அந்த நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து கட்டாய இந்திய நாட்டுப் பண்ணுக்கு முடிவு கட்டினோம். இதுவும் ஒரு சிறப்பான வெற்றியாகும்.

இடிந்தகரையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஓவியப் போட்டிகள் , ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி கலந்து கொண்ட மாணவர்கள் அனைவர்க்கும் பரிசுகள் வழங்கினோம். சுமார் 300 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

இன்னும் பலப்பல நடவடிக்கைகள் எடுத்து தமிழ் மொழிக்கும் , தமிழ் இனத்திற்கும் ஏற்பட்ட சிக்கல்களை களைய செயல்பட்டோம். இனியும் இப்படியான முன்னெடுப்புகள் தமிழ் மக்களின் துணையோடு தொடரும்.

வாழ்க தமிழ், வளர்க தமிழர் நாடு !





[vuukle-powerbar-top]

Recent Post