Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உண்மையை ஒப்புக்கொண்ட சிதம்பரம். விசாரிக்கப் பட வேண்டிய மூவர் !

சென்னையில் நடந்த கருத்தரங்கில் நடுவண் அமைச்சர் கூறியதாவது :
இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையைப் பற்றி ஒரு விரிவான, உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த விசாரணை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு உண்மையான விசாரணையாக இருக்க வேண்டும்.

அந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நம்முடைய கோரிக்கை. தொடர்ந்து நாம் அந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியா குரல் தொடர்ந்து ஒலிப்பதன் காரணமாகத்தான் பலநாடுகளும் இன்று அந்த குரலை ஒலிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரை இதைப்பற்றி பேசாத பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், இப்போது பேசுகிறார் என்றால் அது நம்முடைய இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு வாய் கூசாமல் கூறியுள்ளார் சிதம்பரம் .

இந்தியாவின் தலையீட்டால் தான் இங்கிலாந்து பிரதமர் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தார் என்று மிகப்பெரிய பொய்யை கட்டவிழ்த்து விட்டார் . ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியா தான் இலங்கை மீதான விசாரணைக்கு தடையாக இருந்து வந்துள்ளது. இங்கிலாந்து அரசு இலங்கைக்கு எதிராக எதுவும் சொல்ல முடியாதபடி இந்தியா தொடர்ந்து வந்தது . இதை பல தருணங்களில் தமிழ் அமைப்புகளிடம் இங்கிலாந்து அமைச்சர்களே கூறியுள்ளனர் . ஆனால் மிகப்பெரிய பொய்யரான சிதம்பரம் இப்போது அப்படியே மாற்றி கூறியுள்ளார் . தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்கு கூட விழாது என்ற தெரிந்த பின் இப்போது இந்த பொய்யை கூறியுள்ளார் சிதம்பரம் . எனினும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று இந்தியாவே  ஒப்புக் கொண்ட , அந்த இனப்படுகொலை நடந்த காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்கள் , தகவல் பற்றிமாற்றம் முதலிய உதவிகள் செய்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்துள்ளதையும் விசாரிக்கப் பட வேண்டும். இனப்படுகொலை செய்வதற்கு உறுதுணையாக இருந்த சிதம்பரம் , சோனியா, மன்மோகன் சிங் ஆகிய மூவர்களையும் விசாரித்து தக்க தண்டனையும் வழங்காவ் பட வேண்டும் . தமிழர்கள் இனி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


[vuukle-powerbar-top]

Recent Post