Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆம் ஆத்மி கட்சி சென்னை அலுவலக நிர்வாகியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் .ஒரு பெண்மணி அழைப்பை எடுத்தார்.

நான்: நீங்கள் இந்திக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி தானே.
அவர் : ஆம்.
நான் : ஆம் ஆடமி என்று இந்தியில் பெயர் வைத்துள்ளீர் . அதற்கு என்ன பொருள் ?
அவர் : நம் மக்கள் கட்சி என்று பொருள் ?
நான் : அப்படியென்றால் தமிழ்நாட்டில் மக்கள் கட்சி என்று தமிழ் பெயரில் உங்கள் கட்சி இயக்கலாமே ?
அவர் : நாங்கள் கட்சி பெயரையெல்லாம் தமிழில் மாற்ற மாட்டோம். காங்கிரஸ் கட்சி தமிழில் பெயர் வைத்திருக்கிறார்களா ?
நான் : உங்கள் மொழிக் கொள்கை என்ன ?
அவர் : எங்களுக்கு எல்லோரும் எல்லா மொழியும் கற்க வேண்டும்.
நான் : அது சரி தான் . ஆனால் இந்தியாவில் இந்தி மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக உள்ளது . அதை எதிர்த்து தமிழும் ஆட்சி மொழியாக நீங்கள் போராடுவீர்களா ?
அவர் : சார் , எங்களுக்கு மொழியெல்லாம் பிரச்சனை இல்லை . அதை பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை . நாங்கள் ஊழல் பற்றி மட்டும் தான் கவலைப் படுவோம் . நல்ல நிர்வாகம் மற்றும் ஊழலற்ற ஆட்சியை தமிழகத்திற்கு வழங்குவோம். அவ்வளவு தான்.

நான்: சரி, மொழி குறித்து உங்களுக்கு அக்கறை இல்லை. நாங்கள் 600 பேர்களை உயிர் கொடுத்து இந்தியின் திணிப்பை தடுத்து தமிழை ஆட்சி ஆக்கினோம் . அதை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். பரவாயில்லை. இப்போது எங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் என்னவென்று தெரியுமா ?

அவர் : என்ன சிக்கல் ?

நான் : அணு உலைப் பிரச்சனை, மீனவர் படுகொலை, கெயில் குழாய் பதித்தல் , நதி நீர் பங்கீடு, மீத்தேன் எரிவாயு , கச்சதீவு மீட்பு , ஈழத் தமிழர்களுக்கு நீதி, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குதல், மூவர் தூக்கு,  இப்படி இந்த பிரச்சனைக்கெல்லாம் நீங்கள் என்ன தீர்வு வைத்துள்ளீர்கள், உங்கள் நிலைப்பாடு என்ன ?

அவர் : சார் , நாங்கள் இப்போது தான் தமிழகத்தில் கட்சி தொடங்கி உள்ளோம் . அதனால் இந்த பிரச்சனை எல்லாம் தெரியாது . ஊழல் ஒழிப்பது தான் எங்கள் முதன்மை குறிக்கோள்.

நான் : தமிழகத்தில் மொழி, இனம் , மண் இவற்றை காக்க உறுதி அளிக்கும் கட்சிகள் மட்டும் தான் ஆட்சியை பிடிக்க முடியும். நீங்கள் இனம் சார்ந்து செயல்பட்டால் மட்டுமே நீங்கள் தேர்தலில் வெற்றி அடைய முடியும் . இது டெல்லி அல்ல தமிழர் நாடு . ஆகவே இந்த பிரச்சனைகள் குறித்து நீங்கள் மேலிடத்தில் பேசுங்கள் , பின்பு தமிழகத்தில் தேர்தலில் நிற்கலாம்.

அவர் : சரிங்க , இனிமேல் நீங்கள் சொன்னவற்றை பற்றி நாங்கள் கருத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசனை செய்கிறோம்.

நான் : வாழ்த்துகள். அந்த இந்தித் தொப்பியை தமிழகத்தில் அணிந்து வந்து வாக்கு கேட்காதீர்கள் . நன்றி

ஆம் ஆத்மி கட்சி தமிழர்களின் நாடிப் துடிப்பை அறியாமல் ஊழல் ஒழிப்பு என்ற மத்திரத்தை வைத்து இங்கு ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியாது. இது தான் ஆம் ஆத்மி சென்னை உதவி மையம் அலைபேசி எண்: 7667910234


[vuukle-powerbar-top]

Recent Post