Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவின் ஒரு மொழிக் கொள்கையால் நேரும் அபாயம்!

இப்படம் பெங்களூரில் உள்ள எல்.ஐ.சி நிறுவனத்தில் எடுக்கப்பட்டது. கன்னடர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இவ்வாறு பலகைகள் வைத்து கட்டாயமாக இந்தியை திணித்து வருகிறது இந்திய அரசு. இப்பலகையில் சொல்லப்படும் செய்தி என்னவெனில் 'இந்தியை படியுங்கள் , தேசத்தின் பெருமையை கூட்டுங்கள்' என்பதாகும். கன்னட நாட்டில் இந்தியை பெருமையை கூட்டுவதால் கன்னடர்களுக்கு என்ன பயன்? இப்படியான இந்தி பலகைகளுக்கு கன்னடர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் .

சில மாதங்களுக்கு முன்பு இதே போல் ஒரு அறிவிப்பு பலகையை சென்னை விமான நிலைய அலுவகலத்தில் வைத்தது இந்தித் திணிப்பு துறை. தமிழர்கள் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்த போது அப்பலகையை அகற்றியது விமான நிலைய நிர்வாகம் .

பாஜக மோடி தமிழகம் வந்த போது  அவரது தாய் மொழியில் பேசாமல் இந்தியில் பேசினார் . அவரது பேச்சை ஒரு தமிழர் தமிழ் மக்களுக்கு மொழி பெயர்ப்பு செய்தார். ஆனால் அதே மோடி பெங்களூரு சென்று இந்தியில் பேசியபோது எந்த மொழி பெயர்ப்பும் செய்யப் படவில்லை. கோபம் கொண்ட சில கன்னடர்கள் ஏன் மொழி பெயர்ப்பு செய்ய வில்லை என்று பாஜகவை கேட்டனர் . அதற்கு பாஜகவினர்  கூறியது , கர்நாடகாவில் எல்லோருக்கும் இந்தி புரியும் அதனால் கன்னடம் தேவையில்லை  என்றனர் .

இதன் மூலம் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது என்றால் இந்தியாவின் அனைத்து இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக திணிப்பதுடன் அந்தந்த மாநில மொழிகளை மக்களிடம் இருந்து மறக்கடிப்பதே இந்தியாவின் நோக்கமாக உள்ளது .

அனைவருக்கும் சம உரிமை என்று அரசியல் சாசனத்தில் சொல்லிவிட்டு இந்தி மொழிக்கு மட்டுமே பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து அதை மக்களிடையே திணிப்பது எந்தவகையில் நியாயம் . அனைத்து மொழிகளுக்கும் சம அளவில் உரிமை கொடுக்க வேண்டுமல்லவா ? இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் இந்திக்கும் கொடுக்கும் அதே உரிமைகள் கொடுக்கப்படும் வரை இந்தியாவில் சமதர்மம் நிலைபெறாது .  

It says "Learn Hindi and increase the pride of Nation!"
[vuukle-powerbar-top]

Recent Post