Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!

இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்கா சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் அவரை அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிகின்றன. இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்சித் இந்த நிகழ்வுக்கு கடுமையானா கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். நரேந்திர மோடியும் நாட்டின் உணர்வுக்கு மதிப்பளித்து அமெரிக்க குழுவை சந்திப்பதை தவிர்த்துள்ளார். சிவா சங்கர் மேனன் , பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் ஆகியோரும் அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். இந்திய ஊடகங்கள் தனது பங்கிற்கு எதிர்ப்பை கக்கிவிட்டன. இப்படியாக இந்தியர்கள் எல்லோரும் ஒருமனதாக தேவயானி கைது விடயத்தில் இந்திய இறையாண்மையை காப்பாற்றி விட்டனர்.

ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இந்திய அரசு இலங்கைக்கு சில போர் கப்பல்கள் வழங்க ஒப்பந்தம் போட்டது. ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் இங்கு போராடிய போது மீரா குமார் இலங்கை எம்.பி க்களை இந்திய பாராளுமன்றத்தில் வைத்து கௌரவித்தார் . காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என்று தமிழர்கள் போராடினால் சல்மான் குர்சித் , இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்ந்தார் . இலங்கை தனது நட்பு நாடு என்று கூறினார். பாலச் சந்திரன் படுகொலை காட்சிகள், இசைப்ரியா படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளித்தது இந்தியா. அதை தட்டிக் கேட்ட தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றது இந்தியா ஊடகங்கள்.

இது தான் இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் . தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிர்களுக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் . மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்று நம்பி வருகின்றனர் என்பது வேதனை !
[vuukle-powerbar-top]

Recent Post