Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சேவை பெரும் உரிமை சட்டம் ஏற்கனவே கேரளா உட்பட பல மாநிலங்களில் நிறைவேறி உள்ளது. ஆனால் நாம் முக்கியமாக அறிய வேண்டியது மொழி உரிமை சட்டம். அது என்ன மொழி உரிமை சட்டம்? 

மொழி உரிமை சட்டம் என்றால் ஒரு மாநிலத்தில் எந்த மொழி ஆட்சி மொழியாக உள்ளதோ அல்லது பெரும்பான்மையாக எந்த மொழி பேசப்படுகிறதோ  ஒரு மாநிலந்தில் அனைத்து சேவைகளும் , பொருட்களும் அந்த மொழியில் தான் மக்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். எடுத்துக் காட்டாக தமிழகத்தில் செயல்படும் அனைத்து நடுவண் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சேவைகள், படிவங்கள் , தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் எல்லாம் தமிழ் மொழியில் கட்டாயமாக இருத்தல் வேண்டும். இதே போல் நடுவண் அரசின் கீழ் இயங்கும் ஆயுள் காப்பீடு, வருமானவரி துறை, கடவுச் சீட்டு துறை, ராணுவத் துறை, அஞ்சல் துறை, தொடர்வண்டி துறை என இவை அனைத்தும் தமிழ் மொழியில் சேவைகளை வழங்க வேண்டும். தமிழ் மொழியே இந்த அலுவலங்கங்களில் அலுவல் மொழியாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் அனைவர்க்கும் தமிழ் எழுத பேசத் தெரிந்திருக்க வேண்டும் . சேவைகளை பெரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு முழு உரிமை  உண்டு. அப்படி கேட்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  அந்த மாநில மொழியில் தகவல்களை வழங்க வேண்டும். தமிழகத்தில் இருந்து புறப்படும் வானூர்தியில்  கட்டாயம் தமிழில் அறிவிப்பு இருத்தல் வேண்டும். வணிக வளாகங்களின் அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் இருத்தல் வேண்டும் . இல்லையெனில் அதை வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெறலாம். இது சட்டத்தின் மூலமே சாத்தியமாகும் . மொழி உரிமை சட்டம் முதலில் மாநில அரசு சட்டமாக இயற்ற வேண்டும் . பின்பு இந்திய நடுவண் அரசும் அந்த சட்டத்தை நடைமுறை படுத்தி அந்தந்த மாநில மொழிகளை தன்னுடைய அலுவல் மொழியாக மாற்ற வேண்டும். எந்த மாநிலத்தில் நடுவண் அரசு செயல்படுகிறதோ அந்த மாநில மொழி தான் அலுவல் மொழியாக இருத்தல் வேண்டும். இந்த சட்டத்தை நிறைவேற்றினால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளும் அழிவில் இருந்து காப்பாற்றப்படும். அனைத்து மொழிகளும் இந்திக்கு நிகரான தகுதியை பெரும். எந்த மொழியும் எந்த மொழிக்கும் தாழ்வு இல்லை என்ற நிலை உருவாகும். நாம் இந்த சட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவோம். 

Right to Language act is almost like Right to Information. Here citizens of the state can exercise their to Right to their own language. Whichever state a citizen belongs, he has full rights to demand information, printed materials, announcement in his or her state official language. Whether it is a Union govt office, public sector or private sector company, these companies should provide all information and services in the state language. Call Centres, Banks, Military, Postage, Post office, Central Govt offices should be able to provide information in the local language. This way local people will secure jobs, native language and language rights can be protected. All Indian languages will be treated at par. Therefore it is important for the citizens of Indian to demand for Right to Language act. Let us all push our state govts to introduce and implement Right to Language act immediately and protect our language and people. 


[vuukle-powerbar-top]

Recent Post