Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உண்மையில் இந்தியர்களின் நாட்டுப் பற்றை பாராட்டியே ஆக வேண்டும்!
 
ஊடகங்கள் எதை செய்ய விரும்புகின்றதோ அதையே இந்திய மக்கள் செய்கின்றனர். ஒரு மோசடிப் பெண் தேவயானியை அமெரிக்க அரசு கைது செய்ததற்கு இந்தியர்கள் பல வழிகளில் பொங்கி உள்ளனர்.
அமெரிக்க தூதரகம் முற்றுகை, அமெரிக்க நிறுவனங்கள் முற்றுகை, அமெரிக்க பொருட்கள் புறக்கணிப்பு, பிட்சா உணவகங்கள் சூறையாடல் என்று இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி உள்ளார்கள் .

ஆனால் இதே இந்தியர்கள் காஷ்மீரில், மணிப்பூரில், அசாமில் பெண்கள் தினம் தினம் இந்திய ராணுவத்தால் வன்புணர்வு செய்யப்படுவதை கண்டுகொள்வதில்லை, கண்டிப்பதுமில்லை. தமிழர்கள் வெளிநாட்டில் அவமதிக்கப்பட்டால் அதை பற்றி மூச்சு விடுவதில்லை இந்திய ஊடகங்கள். அப்படியே இந்திய குடிமக்களும் அதை பற்றி பேசுவதில்லை. இவர்கள் யாரை இந்தியர்கள் என்று நினைகிரார்களோ அவர்களுக்கு மட்டுமே இவர்கள் போராடுவார்கள். இந்திய ஊடகங்கள் யாரை இந்தியர்கள் என்று கைகாட்டுகிறதோ அவர்களுக்கு மட்டுமே இந்தியர்கள் போராடுவார்கள் போல் தெரிகிறது.

ஒருவேளை தேவயாணி இலங்கையில் சிங்களவர்களால் அவமதிக்கப் பட்டிருந்தால் இந்நேரம் இந்திய ஊடகங்கள், இந்திய மக்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை தூதரகத்தை சூறையாடி இருப்பார்கள், இலங்கை கிரிக்கெட் அணியை இந்திய மண்ணில் விளையாட அனுமதி மறுத்திருப்பார்கள். தனி ஈழம் தான் தீர்வு என்று இந்நேரம் முழங்கி இருப்பார்கள்.  ஆனால் பாவப்பட்ட தமிழினம் இந்திய நாட்டில் அடிமையாக இருக்கும் காரணத்தால் தமிழர்களுக்கு என்ன நேரத்தாலும் இந்திய ஊடகங்கள் குரல் கொடுப்பதில்லை. இந்தியர்களும் குரல் கொடுப்பதில்லை. தமிழர்கள் தமிழர்களுக்காக போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் என்று இந்திய ஊடகங்கள் முத்திரை குத்தி வேடிக்கை பார்க்கிறது.

நாட்டுப் பற்று எனப்படுவது இந்திய கிரிக்கெட் , இந்தி திரைப்படம் , இந்தி ஊடங்களால் மட்டும் வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதற்கு தேவயாணி கைது விடயத்தின் மூலமாக தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இது தேசிய இனங்களுக்கு எவ்வளவு பெரிய அபாயம் என்பதும் புரிகிறது.  



[vuukle-powerbar-top]

Recent Post