Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் மறைவு உலக மக்களை இன்று பேசவைத்துள்ளது . உலகெங்கும் வாழும் மக்கள் அவரை இன்று நினைவு கூர்கின்றனர். இந்தியா அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட மண்டேலாவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்துள்ளன. தமிழ் இணையதள பயன்பாட்டாளர்கள்  பெரும்பான்மையாக மண்டேலாவின் மரணத்தை குறித்து இன்று பேசியுள்ளனர்.

மண்டேலாவை வெறும் நினைவு கூர்வதின் மூலமாக நாம் சாதிப்பது ஒன்றும் இல்லை. எதற்காக மண்டேலா  போராடினாரோ, அந்த காரணிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் பொருத்தும். இங்கு தமிழ் மக்கள் இந்திய துணைக்கண்டத்தில் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும் சம அளவில் இந்திய அரசால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தை தலைதூக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய ஆதிக்க அரசு. அதே போல் தமிழக தமிழர்கள் தங்கள் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, நில உரிமை, இயற்கை வளங்களின் மீதான உரிமைகளை கோர முடியாத அளவிற்கு ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த உரிமைகளை தமிழர்கள் கோரினால் அவர்கள் தீவிரவாதிகளாக இந்திய அரசாலும் இந்திய ஊடகத்தாலும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இன்று வரை இந்திய அரசால் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய ஒன்றியத்தில் சிக்குண்ட  பல்வேறு தேசிய இனங்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றன. இதை பற்றி பேசவோ, குரல் கொடுக்கவோ இங்கு பெரிய அரசியல் கட்சியோ, சக்திகளோ இல்லை என்பதும் வருத்தமான விடயம். தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து அடிமை விலங்கில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள போராடுவதே உண்மையில் மண்டேலா போன்ற தலைவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் மண்டேலா போன்ற தலைவர்கள் உருவாகிறார்கள். இப்படியான தலைவர்களை உருவாக்குவது பயங்கரவாத அரசுகள் தான். தமிழகத்திலும் நமக்கு ஒரு மண்டேலா தேவைப்படுகிறார். தொடக்கத்தில் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்திய நாடுகள் பிற்காலத்தில் அவருக்கு நோபல் பரிசை வழங்கியது. அது போல் தமிழக அரசியல் விடுதலையை முன்னெடுக்கும் தமிழின தலைவரை தீவிரவாதி , இனவாதி என்று உலகம் சொன்னாலும் நிச்சயம் ஒரு காலத்தில் அவரை இவ்வுலகம் போற்றி மரியாதை செலுத்தத் தான் போகிறது. நம் இனத்தின் நியாயமான கோரிக்கை உலகின் காதுகளுக்கு எட்டத்தான் போகிறது.

அதை நினைவில் வைத்து மொழியால் , இனத்தால் ஒடுக்கப்படும் தமிழினம் ஒன்று திரண்டு போராட முன்வரவேண்டும். தமிழகத்திலும் தமிழ் ஈழத்திலும் தமிழருக்கான இறையாண்மை பொருந்திய தமிழர் அரசை கட்டி எழுப்புவதே நம்  குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அப்பணியை நிறைவேற்ற மண்டேலா மறைந்த நாளில் நாம் சூளுரைப்போம்.


[vuukle-powerbar-top]

Recent Post