Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நெல்சன் மண்டேலா மரணம்.  5 நாட்கள் இந்திய தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.

ஒரு ஒப்பற்ற போராளியின் மரணத்திற்கு தமிழக அரசு அஞ்சலி செய்வது வரவேற்கத்தக்கது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ மண்ணில் தமிழினமே  அழிக்கப்பட்டது . 1.5 இலட்சம் உறவுகள் கொல்லப்பட்டனர். இதை முன்னிட்டு ஒரு நாலாவது தமிழக அரசு  கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதுண்டா. ஒவ்வொரு ஆண்டும் மே 18 இனப்படுகொலை நாளும் வந்து போகிறது . அந்த நாளிலாவது தமிழக அரசு அஞ்சலி செலுத்தியது உண்டா . ஈழ மக்களுக்கா வேண்டாம், மொழிப் போராட்டத்தில் 600 தமிழர்களை சுட்டுக் கொன்ற தினம் மொழிப் போர் ஈகியர் நாள். அந்த நாளிலாவது தமிழக அரசு அரைக்கம்பத்தில் கொடியை பறக்கவிட்டதுண்டா ?

இப்படி தமிழினத்திற்கு அழிவு நேரும் போது வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? தமிழருக்கான தமிழக அரசு அமையும் போது மே 18 மற்றும் சனவரி 25 ஆம் நாட்கள் தமிழக அரசின் துக்க தினமாக அறிவிக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post