Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தை நாசமாக்கிய இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்த தமிழினமே ஒன்று படுவோம் !!

 திமுக அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை தொடர்ந்து நாசமாக்கி வருகிறது. ஊழல் , இயற்கை வளங்களை சீரழித்தல் , மணல் கொள்ளை, அளவில்லா மதுக் கொள்கை, இலவசங்கள் கொடுத்து மக்களை மடையராக்குதல், இனத்திற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தல் , தமிழ் மொழியை அழித்தல், அணு உலைகளை ஆதரித்தல் , நடுவண் அரசின் மக்கள் விரோத போக்கிற்கு துணை போதல், சொத்துக்களை குவித்தல் போன்ற அனைத்து விடயங்களிலும் இக்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளது . இவர்கள் இருவருக்குள் போட்டி போட்டுக் கொண்டு யார் தமிழர்களை அதிகம் ஏமாற்ற முடியும் என்று செயல்படுகின்றனர். இந்த இருபெரும் தமிழர் விரோத சக்திகளை வீழ்த்தாமல் தமிழினத்திற்கு விடிவு இல்லை.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் நலம் சார்ந்த கூட்டணி மூன்றாம் அணியாக உருவானால் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சி விட முடியும் என்ற நிலை உள்ளது . தமிழர்களுக்கு ஆதரவாக பேச குறைந்தது 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல வேண்டும். திமுக அதிமுக பா. ம உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அதேபோல் காங்கிரெஸ், பாஜக, பொதுவுடைமை கட்சிகளும் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய வில்லை. இவர்களோடும் தமிழர்கள் கூட்டணி வைக்க இயலாது. அதனால் பலமான மூன்றாம் அணி தமிழர்களின் நலனை மட்டுமே முன்வைத்து உருவாக வேண்டும்.

மதிமுக பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் அந்த கட்சியையும் நாம் புறக்கணிக்க வேண்டியது தான். அப்படி செய்யாமல் மதிமுக தேசிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல் மூன்றாம் அணியை உருவாக்க முயன்றால் தமிழர்கள் மதிமுக விற்கு ஆதரவு தெரிவிக்கலாம். மதிமுகவுடன் கைகோர்க்க நாம் தமிழர் கட்சியும் , தமிழக வாழ்வுரிமை கட்சியும் தயாராக வேண்டும்  . இவர்களோடு சிறிய தமிழினம் சார்ந்த கட்சிகளும் உடன் நிற்கும் . விசிக இந்த தமிழர் கூட்டணிக்கு வராது என்று உறுதியாக தெரிந்த காரணத்தால் நாம் அவர்களை இந்த கூட்டணியில் சேர்க்கவில்லை.

மேலும் 300 க்கும் மேற்பட்ட சிறிய தமிழ் இயக்கங்கள் உள்ளன .மாணவர்கள் களத்தில் உள்ளனர் . அனைவரும் சேர்ந்து வரும் தேர்தலில் தீவிரமாக பரப்புரை செய்தால் தமிழர் நல கூட்டணி 20 இடங்களை நிச்சயம் கைப்பற்றும். இதன் மூலம் தமிழக தமிழர்களுக்கு ஈழத் தமிழர்களுக்கு சிறிய நம்பிக்கை பிறக்க வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று கட்சிகளும் சிந்தித்து செயல்பட தமிழர்கள் வேண்டுகிறோம்.

இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்துவோம் தமிழகத்தை காப்பாற்றுவோம்!! 
[vuukle-powerbar-top]

Recent Post