Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அதை நடைமுறை படுத்துவதில் தமிழக அரசு மெத்தனப் போக்கையே கடைபிடிக்கிறது. ஒரு இயக்கமாக எங்களால் முடிந்த அழுத்தத்தை கடை உரிமையாளர்களுக்கு கொடுத்து தமிழில் பெயர் பலகை மாற்றுகிறோம்.

தினமும் ஏதாவது சில கடைகளுக்கு அரசின் ஆணையை கொடுத்து மாற்ற சொல்லி அறிவுறுத்துகிறோம். சில கடைகள் உடனே மாற்றுகிறார்கள் , சிலர் பலமுறை சொல்லிய பின்பே மாற்றுகிறார்கள். சிலருக்கு அடாவடியாக மிரட்டி மாற்ற வேண்டியுள்ளது.

இங்கு நீங்கள் படத்தில் பார்க்கும் கடைகளும் வன்மையான அணுகுமுறையால் பெயர் பலகை மாற்றப்பட்டது. மார்வல் என்னும் பழரசக் கடை மலையாளிகளால் நடத்தப்படுகிறது. பல மாதங்களாக இவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததும் இவர்கள் தமிழுக்கு மாற்றவில்லை. ஒவ்வொரு முறையும் சண்டைக்கு வருவார்கள்.

அதே போல லான்றெக்ஸ் என்ற சலவையகம் அயனாவரத்தில் தன்னுடைய கிளைக்கு தமிழில் பெயர் இல்லாமல் பலகை வைத்திருந்தது. இவர்களுக்கு 28 கடைகள் சென்னையில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு நாம் கெடு கொடுத்தோம். கடைசியாக ஒரு தேதி அறிவித்து அந்த தேதியில் அவர்கள் பெயர் பலகை அகற்றப்படும் என்று அறிவித்தோம். முடிவில் பணிந்த அந்த நிறுவனம் குறித்த தேதியின் முன்னரே கடைக்கு தமிழில் பெயர் வைத்தது. மலையாளக் பழரசக் கடைக்கும் அவ்வாறே பெரும் தகறாரு நெருக்கடி கொடுத்து கடைசியில் தமிழில் சிறிதாக பெயர்பலகை மாற்றப்பட்டது.

இது போல் பல அனுபவங்கள். சில கடை உரிமையாளர்கள்  திமிராக மற்ற அனைவரையும் முதலில் மாற்றச் சொல்லுங்கள்  கடைசியில் நாங்கள் மாறுகிறோம்  என்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் காலக்கெடு தான் கொடுக்க வேண்டி உள்ளது . அரசு ஆணையை மதிக்கவே இவர்கள் தயாராக இல்லை.

தனியார் நிறுவனம் இப்படி என்றால் போக்குவரத்து காவல் துறை தன்னுடைய பொது அறிவிப்பு பலகையில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துகிறது. இருக்கை  பட்டை கட்டாயம் என்று அறிவித்து இப்போது இருக்கை பட்டை அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கிறது காவல்துறை. தமிழில் அறிவிப்பு  பலகை வைக்காத காவல்துறையை யார் தண்டிப்பது ?  

பல முறை கடிதம் எழுதியும் பதில் தராத சென்னை மாநகராட்சி இப்போது பதில் அனுப்பி உள்ளது. தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அறிக்கை கொடுக்க மாநகராட்சி இப்போது செயலில் இறங்கி உள்ளதாம் .. பார்ப்போம் நல்ல நேர்மையான நடவடிக்கை எடுக்கிறதா என்று ! 
[vuukle-powerbar-top]

Recent Post