Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உங்கள் மொழி உங்கள் உரிமை அதை கேட்டுப் பெறுங்கள் !!
You have Right to your Language - assert it !! - For English scroll down

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அத்தியாவசிய அடிப்படை உரிமைகள் மக்களுக்கு வழங்கியுள்ளது. அதில் உங்கள் தாய் மொழிக்கான உரிமையும் உள்ளது. அதை வலியுறுத்தி பெற வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது. இந்த அடிப்படை மொழி உரிமையை தர இந்திய அரசு மக்களுக்கு மறுத்து வருகிறது . மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் அந்த மாநில மொழிகளில் இந்திய அரசு தனது சேவைகளை வழங்க வேண்டும் . இது தான் மொழி உரிமை எனப்படுவது .

ஆனால் இந்திய அரசு மக்களுக்கு வழங்கும் தகவல்கள் , ஆவணங்கள் , அரசாணைகள், உரிம அட்டைகள் , சேவைகள், வேலை வாய்ப்புகள் என எல்லாவற்றையும் இந்தி மொழியில் தான் வழங்குகிறது . இது இந்திய மக்களின் மொழி உரிமையை மறுக்கும் செயலாகும் . இதற்கு இந்திய மக்களே துணைபோகும் செயலும் வேதனை அளிக்கிறது.

மக்களுக்கு வழங்கும் அனைத்து சேவைகளும் , ஆவணங்களும் அனைத்தும் எந்த மாநிலத்தில் வழங்கப்படுகிறதோ அந்த மாநில மொழியில் தான் இருக்க வேண்டும் . எடுத்துக் காட்டு, சமையல் எரிவாயு உருளைகள் மீது தமிழில் தான் எழுதப்பட வேண்டும், இந்தியில் அல்ல. வருமான வரி அட்டை , வங்கி படிவங்கள், விமான சேவை அறிவிப்புகள் என அனைத்தும் அந்தந்த மாநில மொழியில் தான் இருக்க வேண்டும். இதை கேட்டுப் பெறுவது அனைவரின் உரிமையாகும் . இந்திய அரசு வழங்கும் கல்வி , வேலை வாய்ப்பு கூட மாநில மொழியில் தான் இருக்க வேண்டும். இந்தியில் அல்ல. அஞ்சல் தலை , நாணயங்கள் , கடவுச் சீட்டு எந்த மாநிலத்தில் வழங்கப்படுகிறதோ அந்த மாநில மொழியில் தான் இருக்க வேண்டும் . இது தான் உங்களின் உண்மையான மொழி உரிமை ஆகும் . இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ளது .

ஆங்கிலம்
You have right to your language - assert it !

Linguistic rights include, among others, the right to one's own language in legal, administrative and judicial acts, language education, and media in a language understood and freely chosen by those concerned.

All Union Govt services, documents, information, Govt orders, Govt cards should come to your hands in your state language. This is called Right to Language. Stamps, coins, passport, pan card wherever it is issued , it should bear your state language and not Hindi . Every citizen has the right to ask for services, products in their local state language. It is an offence to impose an another language on someone who does not want that language. Also it is mandatory to provide services and jobs in respective state language and not Hindi. People belonging to non-Hindi states have their right to their own language. They can demand every official documents in their respective state language and can reject Hindi if imposed on them. Let us bring in a change , let us exercise our language rights. Right to language is a fundamental human right.


[vuukle-powerbar-top]

Recent Post