Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட அண்ணன்  உதயகுமார் நிபந்தனைகளை போட்டுள்ளார் என்று தெரிகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் வலுவான தமிழர் நலக் கூட்டணி உருவாகும் என தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் விரும்பினர். அது இன்று வரை எட்டா கனவாகவே உள்ளது . தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகளுக்கு இன நலனை காட்டிலும் கட்சியின் நலனே பெரிது என அவர்கள் விரும்பும் கூட்டணிக்கு சென்று விடுகின்றனர். தமிழர் பிரச்சனைகளுக்கு ஒன்றாக கரம் கோர்க்கும் கட்சிகள் தேர்தலில் கரம் கோர்பதில்லை என்பது வேதனையான விடயம்.

இந்த நிலையில் அணுஉலைப் போராட்டத்தை இந்த நொடி வரை தக்கவைத்து போராடிவரும் அண்ணன் உதயகுமாரின் தேர்தல் நிலைப்பாடு மிக முக்கியமானதாகும். காரணம் மாநில அரசும் நடுவண் அரசும் அணு உலைப் போராளிகளுக்கு சொல்லவொண்ணா துன்பத்தை கொடுத்துள்ளனர். அத்தனை பொய் வழக்குகள் அவர்கள் மேல் பதிவு செய்யப் பட்டுள்ளது. இடிந்தகரை விட்டு வெளியே வர முடியாத படி வழக்குகள். மாநிலத்தில் உள்ள கட்சிகள் வலிமையாக இல்லை . இந்திய தேசிய கட்சிகளின் ஆதரவும் இல்லை . காங்கிரஸ் பாஜக இரண்டும் மக்கள் விரோதமாக அணுஉலையை ஆதரிக்கும் கட்சிகளாக உள்ளன. அப்படியான சூழ்நிலையில் ஆமாட்மி கட்சி அணு உலைப் போராட்டத்தை மதித்து உதயகுமார் அவர்களை கட்சியில் இணை அழைத்துள்ளது. ஆனால் உதயகுமார் அவர்கள் தெளிவாக அவர் நிபந்தனைகளை முன்வைத்து உள்ளார் . முதலில் கட்சியின் பெயரை தமிழ்ப் படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் சிறப்பு. மேலும் அணுஉலைப் பிரச்சனை, ஈழப் பிரச்சனை . மீனவர் பிரச்சனை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் உதயகுமார் . இந்த பிரச்சனைகளில் தமிழக பெரிய கட்சிகள், தேசிய கட்சிகளுக்கு எந்த நிலைப்பாடும்  இல்லை என்பது தான் உண்மை. அதனால் ஆம் ஆத்மி கட்சி தமிழர்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தால் உதயகுமார் அக்கட்சியில் இணையக் கூடும் எனது தெரிகிறது. தமிழர் நலக் கூட்டணி கானல் நீராகிப் போன காரணத்தால் இப்படியான கூட்டணி உருவானால் அது காங்கிரஸ் பாஜக திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்றே தோன்றுகிறது. கூடவே அண்ணன் உதயகுமார் அவர்கள் ஆம் ஆத்மி கட்சியிடம் சில நிபந்தனைகளை வைக்க வேண்டும்.  ஆம் ஆத்மி கட்சி எதிர்காலத்தில் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாகக்க துணைபுரியவேண்டும். ஹிந்தி மொழியின் ஒற்றை ஆட்சி மொழிக் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் . அனைத்து தேசிய இன மொழிகளையும் சமமாக இந்திய அரசு வளர்க்க வேண்டும் , மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் , மாநில நிலத்தை பாதுகாக்கும் நில உரிமை சட்டம் கொண்டு வரவேண்டும் , நதி நீர் பங்கீடு நேர்மையானதாக இருக்க வேண்டும் , தேசிய இன மக்களின் கல்வி , பண்பாடு, மொழி முதலிய சகல உரிமைகளும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் படவேண்டும் . இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் பதில் சாதமாக இருக்கும் பட்சத்தில் அண்ணன் உதயகுமார் மற்ற இயக்கங்களுடன் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் வலுவான மாற்றுக் கூட்டணி ஒன்றை அமைக்கலாம். இதன் மூலமாவது தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் நிலை உருவாகட்டும். உங்கள் மேலான கருத்துக்களை முன்வையுங்கள். மற்ற அரசியல் கட்சிகளும் நம் குரலை கேட்கட்டும் . 
[vuukle-powerbar-top]

Recent Post