Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லிக்கு ஒரு கெஜ்ரிவால் போல தமிழ் இனத்தை காப்பாற்ற தமிழகத்திற்கு தேவை ஒரு தன்மானமுள்ள தமிழர்!

டெல்லி காவல்துறை நடுவண் அரசின் கீழ் இயங்குவதால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியவில்லை. அதனால் காவல்துறை அதிகாரம் டெல்லி மாநில அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இரண்டாம் நாளாக ஒத்துழையாமை போராட்ட்டம் நடத்தி வருகிறார். தன்னுடைய அலுவலகத்தையே வீதிக்கு கொண்டு வந்துவிட்டார் . தான் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும்வரை வீதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து டெல்லி கடும் குளிரில் வீதியில் படுத்து உறங்குகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். ஒரு மாநில அரசுக்கு தேவையான அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்து அதை பெறுவதற்கு அவர் கடிதம் எழுதவில்லை, அறிக்கை வெளியிடவில்லை, மாறாக வீதியில் இறங்கி மக்களாட்சி உரிமையை நிலைநாட்டி உள்ளார் அரவிந்த். இப்படியான போராட்டத்தை இந்திய வரலாற்றில் எந்த மாநில முதல்வரும் யாரும் நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  உலகமே வியக்கும் வண்ணம் அர்விந்த் கெஜ்ரிவால் இப்போது போராட்டம் செய்கிறார். இது வெறும் சாதாரண போராட்டம் என்று மட்டும் கூறி அவர் நின்றுவிடவில்லை . ஒரு படி மேலே போய், டெல்லியில் நடக்க இருக்கும் குடியரசு தின விழாவை நடத்த முடியாமல் செய்வோம் என்று அறைகூவல் விடுத்தள்ளார் கெஜ்ரிவால். நாட்டில் உள்ள பெண்களின் கற்பிற்கு பாதுகாப்பு வழங்கமுடியவில்லை , இந்த நாட்டிற்கு குடியரசு தினவிழா கொண்டாட்டம் ஒரு கேடா என கேள்வி எழுப்பியுள்ளார் கெஜ்ரிவால். இப்படி ஒரு கேள்வியை இந்தியாவில் எந்தத் தலைவரும் கேட்டதில்லை .

இப்போது தமிழகத்திற்கு வருவோம். 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் சிங்கள இந்திய படைகளால் கொல்லப்பட்டார்கள் . அப்போது வீதிக்கு வந்து போராட வேண்டிய தமிழக முதல்வர் வெறும் கடிதம் மட்டுமே எழுதினார் . அண்ணா சமாதிக்கு வந்து மூன்று மணிநேரம் படுத்து உறங்கி போர் நின்று விட்டது என்று கூசாமல் பொய் சொன்னார். அந்த பின் நடந்த குடியரசு தினவிழாவை தமிழர்கள் நாங்கள் கொண்டாட மாட்டோம் என அறிவிக்க வில்லை . கருணாநிதியோ ஜெயலலிதாவோ தமிழர்களுக்கு நேரும் இன்னல்களை கண்டு குடியரசு நாளை நாங்கள் நடத்த மாட்டோம் என்று சொல்லமாட்டார்கள். இந்திய அரசுக்கு ஏவல் செய்யும் எடுபிடிகளாகவே உள்ளனர். இந்திய அரசை எதிர்த்து அர்விந்த் கெஜ்ரிவால் போல ஒரு முற்றுகை போராட்டம் நடத்த இந்த திராவிட கட்சிகள் முன்வர மாட்டார்கள் என்பது தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

இன்று கெஜ்ரிவால் டெல்லியில் நடத்தும் போராட்டம் போல தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் நடத்தி இருந்தார்கள் என்றால் தமிழகம் தான் இழந்த பல உரிமைகளை மீட்டிருக்கும் . இப்படி ஒரு போராட்டம் கருணாநிதி அப்போது செய்திருந்தால் ஈழத்தில் 1.5 இலட்சம் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவை , உலக நாடுகளை நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். இனியாவது தமிழகம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் உரிமைப் போராட்டங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் . நமக்கு பல உரிமைகள் மறுக்கப் பட்டு வருகிறது . நமது உரிமைகளை நாம் கேட்டுப் பெறத் தான் வேண்டும் . அவைகள் நமக்கு கிடைக்கும் வரை நாம் ஓயாது இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும் . அப்படி போராடும் ஒரு தலைவரைத் தான் நாம் தமிழக முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் . நம்மை அடிமைப்படுத்தி டெல்லிக்கு கூட்டிக் கொடுக்கும் தமிழக கட்சிகள் நமக்கு தேவையில்லை . தன்மானமுள்ள தமிழரைத் தான் இனி தமிழகத்தை ஆளச் செய்தல் வேண்டும் .  இனியாவது நாம் மயக்கத்தில் இருந்து வெளியே வருவோம் . தமிழகம் இழந்த உரிமைகளை மீட்க வீதியில் இரங்கி போராடுவோம். தேர்தலில் ஒரு தன்மானத் தமிழரை நிற்கவைத்து அவரை வெற்றி பெற வைப்போம். தமிழினத்தை காப்பாற்ற தமிழகத்திற்கு அப்படியான முதல்வரே தேவை .[vuukle-powerbar-top]

Recent Post