Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு ஆகியனவற்றினை மையமாக கொண்டு இந்திய கட்சிகளையும் - இந்திய அரசினையும் கோரும் தீர்மானம் ஒன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்டள்ளது.

இத்தீர்மானத்தினை தமிழகம் மற்றும் இந்திய ஊடகத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை காலை 11.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் பேராசிரியர் சரசுவதி, தோழர் தியாகு, இராஜ்குமார் பழனிசாமி , திரு அதியமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் அவர்களும் அமெரிக்காவில் இருந்தபடியே ஸ்கைப் மூலமாக நாடுகடந்த தமிழீழ அரசின் தீர்மானத்தை வாசித்தார். இந்திய அரசுக்கும் , தமிழக அரசுக்கும் , தமிழகத்  தமிழர்களுக்கும் கோரிக்கை வைத்தார். பின்பு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உருத்திரகுமாரன் அவர்கள் பதில் அளித்தார்.

கோரிக்கைகள் வருமாறு :

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், போர்குற்றம் ஆகியவற்றை விசாரிக்க பன்னாட்டு சுயாதீன குழுவொன்றை நிறுவுவதற்கு ஐ.நா.வில்  இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் .

ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க அனைத்துல நாடுகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்திய அரசு எல்லா வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . வங்காள தேசம் பிரிந்து செல்ல இந்தியா உதவியது போலவும் , தென் சூடன், கிழக்கு தீர்மூர் , ஸ்காட்லான்ட் போன்ற நாடுகள் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய எந்த தடையும் சொல்லாதது போலவும் , தனி ஈழத்திற்க்கான பொது வாக்கெடுப்பிலும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் .

ஈழத் தமிழர்களின் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்க பன்னாட்டு விசாரணையும் , பொது வாக்கெடுப்பும் அவசியம் ஆகிறது . அதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் இத்தகைய முன்னெடுப்புகளை எடுக்கக் கூடியே கட்சிகளுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் , இந்த கோரிக்கையை தங்கள் தேர்தல் அறிக்கையாக தமிழக அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும் எனவும் உருத்திர குமாரன் கேட்டுக் கொண்டார் . இந்திய நாட்டின் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தமிழீழம் அமையும் போது தமிழீழ அரசு இந்தியாவிற்கு எல்லாவகையிலும் துணை நிற்கும் என்ற செய்தியையும் எடுத்துக் கூறினார் . சிங்கள அரசை போல தமிழீழ அரசு சீனாவின் பக்கம் சென்று இந்தியாவிற்கு துரோகம் இழைக்காது என்பதையும் குறிப்பிட்டார் திரு உருத்திரகுமாரன். தமிழக அரசும் விரைந்து தமிழீழ மக்களின் துன்பத்தை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் . தமிழீழமே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறித்தினார்.





[vuukle-powerbar-top]

Recent Post