Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் வெளிமாநில மக்கள் குடியேற்றமும் அதிகரிக்கும் குற்றங்களும்!

அண்மையில் சிறுசேரி அருகே பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொடூரமான முறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த கொலையில் மேற்கு வங்காள வாலிபர்கள் தாங்கள் தான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இருவரை காவல்துறை கைது செய்துள்ளது . ஒருவர் மேற்கு வங்காளத்திற்கு தப்பி சென்றுள்ளர். காவல்துறை இப்போது ஒருவரை பிடிக்க மேற்கு வங்காளம் விரைந்துள்ளது.

தமிழகத்தில் வந்து தங்கி பலவகையான தொழில்களில்  ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் வெளி மாநிலத்தவர்கள் பல குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்  . கொலை , கொள்ளை , வன்புணர்ச்சி , ஆள் மாறாட்டம், மோசடி  என பல குற்றங்களில்  இவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு எளிமையாக தப்பிக்கவும் செய்திகின்றனர். காரணம் இவர்கள் தப்பிக்க பல வழிகள் உள்ளன. பெரும் குற்றங்களில் ஈடுபட்டதும் , இவர்கள் தொடர்வண்டி மூலமாக ஒரு இரவில் அவர்கள் சொந்த மாநிலம் சென்று விடுகின்றனர் . இவர்களை கட்டுப்படுத்த எந்த பொறிமுறையும் இல்லை. இவர்கள் தமிழ் மொழியும் கற்பதில்லை . இங்கு வந்தும் இந்தி மொழி மட்டுமே பேசி பேசுகின்றனர் . தமிழர்களின் பண்பாடுகளை இவர்கள் மதிப்பதில்லை . தமிழர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் இவர்கள் உணர்வதில்லை . சிலர்,  தமிழர்களை கேவலமாக நினைக்கும் மனநிலையிலும் உள்ளனர். இந்தியாவில் எங்கு சென்றாலும் இந்தி தான் பேசப்படுகிறது என்ற தவறான புரிதலும் இவர்களுக்கு உள்ளது.

இவர்களுக்கு வசதியாக தமிழகத்தில் அரசு செலவில் ஆங்கில வழிக் கல்வி , மலிவு விலை உணவகம் , இலவச மருத்துவம் , மலிவு விலை அரிசி , விலையில்லா பல பொருட்கள் அரசு வழங்குகிறது . வெளி மாநில மக்களுக்கும் குடும்ப அட்டை , வாக்காளர் அட்டை வழங்கி தமிழக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பெருமளவில் இவர்கள் படையெடுத்து தமிழகம் வருகின்றனர். இங்கு வந்து எல்லாம் கிடைத்தும் இவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கிறனர் . இவர்களை தடுக்கவோ , கண்காணிக்கவோ எந்த வழிவகையும் இல்லை . இந்திய அரசியல் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக இவர்கள் பயன்படுத்தி இந்திய மாநிலங்களில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் , வெளியறலாம் என்று நினைகின்றனர் . ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உரிமைகள் சலுகைகள் உள்ளன . அவற்றை பயன்படுத்தி விட்டு பின்பு  அங்கிருந்து வெளியேறி வேறு ஒரு மாநிலத்திற்கு எளிதாக இவர்கள் குடியேறலாம். பல மோசடிகளிலும் ஈடுபட்டு அங்கிருந்து கண்கான இடத்திற்கு இவர்கள் குடிபெயரலாம் . இதனால் பாதிக்கப்படுவது மண்ணின் மைந்தர்கள் தான் .

மண்ணின் மைந்தர்களின் பாதுகாப்பு , உரிமைகள் இவற்றை உறுதி செய்ய உடனடி தேவை கடுமையான குடியேற்ற சட்டம் தான். வெளி மாநிலத்தில் இருந்து தினமும் புதிதாக ஆயிரக்கணக்கில் மக்கள் தமிழகம் வந்து குடியேறுகிறார்கள் . இவர்களை கண்காணிக்க அரசு இவர்களை உடனடியாக காவல்துறையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பதிவு செய்யாத வெளிமாநில மக்களுக்கு வேலை வாய்ப்பை எந்த நிறுவனமும் வழங்கக் கூடாது . இவர்களுக்கு தமிழக வாக்காளர் அட்டை , குடும்ப அட்டைகளை வழங்கக் கூடாது. தற்காலிக குடியேற்ற சீட்டை இவர்களுக்கு வழங்கலாம். இதில் குறிப்பிட்ட காலம் இவர்களுக்கு இங்கு தங்க கால நிர்ணயம் செய்யலாம். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் மீண்டும் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கலாம்.  இவர்கள் தங்கள் வேலையை முடித்து சொந்த ஊருக்கு திரும்பும் போது அரசிடம் குடியேற்ற சீட்டை ஒப்படைத்து விட்டு செல்லலாம். இதன் மூலம் வெளிமாநில மக்களின் போக்குவரத்து கண்காணிக்கப் படும் . எத்தனை பேர் வருகிறார்கள் , வெளியேறுகிறார்கள் என்ற கணக்கை அரசு அறியலாம் . அதற்கான நிதி நிலையையும் அரசு கருத்தில் கொண்டு செயல்படலாம். இப்படியான திட்டம் அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் படி செய்யலாம் . இதன் மூலம் குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு நாளடைவில் குற்றங்களை குறைக்க வழிவகை செய்யலாம்.  

அரசு இத்தகைய பரிந்துரைகளை உடனே கருத்தில் கொண்டு ஆவன செய்தல் வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளை , பாதுகாப்பை அரசு உறுதி செய்தல் வேண்டும் . வெளி மாநில மக்களின் குடியேற்றத்தை அரசு உடனடியாக கட்டுப்படுத்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டி நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது .


[vuukle-powerbar-top]

Recent Post