Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள்

1. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழின நலன் சார்ந்த அரசியலை அடிப்படை நோக்கமாகக்  கொண்டது. தமிழ் இனநலன் சார்ந்த ஓர் அரசியல் இல்லை என்பதைக் கருத்தில்க் கொண்டு அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவையை உணர்ந்து தமிழ் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் நலன் என்பது தமிழகத்திலுள்ள பிற மொழியினர் நலனுக்கு எதிரானதல்ல. தமிழர் நலன் என்பது அண்டை மாநிலங்களில் அவரவர் மொழியினரின் நலன் எப்படி பாதுகாக்கப் படுகிறதோ அந்த வகையில் தமிழரின் நலன் தமிழகத்தில் பாதுகாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனாலும் அங்கு தமிழர்கள் நடத்தப்படுவது போலவே இங்கு அம்மாநில மொழியினர் நடத்தப்படுவார்கள்.

2. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழகத்தின் உச்ச அதிகாரம் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. தமிழகத்தில் தமிழர்கள் அல்லாதவர்களின் தலைமையினாலான ஆட்சி தொடர்ந்ததன்/ தொடர்வதன் விளைவாகவே இன்று தமிழ் இனத்திற்கு இவ்வளவு சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. அதனால் இனி தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் தமிழர்களே இருக்க வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது.

அதேவேளையில் தமிழக எல்லைக்குள் மாற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், தமிழர் என்று தன்னை அடையாளப்படுத்தாமல், தனது அடையாளத்தை வெளிப்படுத்தி, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவரது பிரதிநிதித்துவம் ஏற்றுக் கொள்ளப்படும்.

3. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருவர் பேசும் தாய்மொழி மற்றும் அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை வைத்தே அவர் தமிழர் என்று அறியும் முறையை ஏற்கிறது. இதற்காக வேறு நவீன - அறிவியல் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளது.  அதேவேளையில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவது, தீண்டாமை போன்றவற்றை முற்றிலும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.

4. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்களில் முக்கியத்துவம் கொடுக்கும். தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்கப்படும். தனியார் வேலை வாய்ப்பிலும் தமிழர்க்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தங்கள் வீடுகளில் பிற மொழியை பேசுபவர்கள் பிற மொழியினராகவே கருதப்படுவர்.

5. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டது. இது அனைத்து விஷயங்களிலும் பெரும்பான்மை தமிழர்களின் கருத்தைக் கண்டறிந்து அவர்களின் ஆதரவோடுதான் எந்த விஷயத்தையும் பின்பற்றும். தனிநபர்கள், மக்கள் ஆதரவைப் பெறாத எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு, சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவை சிறந்த கருத்தாக, சிந்தனைகளாக இருந்தால் அரசாங்கத்தின் நெறிமுறைகளாக வைத்துக்கொள்ளப்படும். வேறு முக்கியத்துவம் கொடுக்கப்படாது.

6. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டுள்ளது. தமிழர்களின் நலன் சார்ந்த கருத்துக்களை முன்வைத்து, அதற்கு மக்களின் ஆதரவைப் பெற்று அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது. அதன் மூலமே தமிழர் நலன் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறது.
ஜனநாயகப் பாதையில் இந்திய அரசியலமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேர்தல் வாயிலாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் அமைப்புதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மாநிலங்களுக்கு அதிக உரிமைகளுடனான மாநில சுய ஆட்சியை நோக்கி நகர்வது.

7. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனைத்து சாதி, மதப் பிரிவினரின் உரிமைகள், நலனைப் பாதுகாக்கும், பிரதிநித்துவம் அளிக்கும்.  ஆனால் சாதி-மதங்களின் நலன் இனநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். சாதி நலனா? மத நலனா? இன நலனா? என்ற சிக்கல் வரும்போது இன நலனையே நான் முதல் நலனாகக் கொள்வேன் என்ற புரிதலை அனைத்து தமிழரிடத்திலும் உருவாக்கப்படும்.

8. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும். அதேவேளையில் அவசியத்தின் அடிப்படையில் மாற்று மொழிவழிக் கல்விகளுக்கும் அனுமதி அளித்து அது முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

9. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் நில உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்கும். தமிழகத்தில் விவசய நஞ்சை நிலங்களாக அறியப்பட்ட எந்த நிலத்தையும் விவசாயம் தவிர்த்த வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியோம்.

10. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரம் கொண்டது. புதிய கருத்துக்களை ஏற்கும் தன்மையுடையது. எந்தவொரு கருத்துக்கும் பெரும்பான்மை மக்கள் அளிக்கும் ஆதரவின் அடிப்படையிலேயே அது ஏற்கப்படும். முடிவு எட்டமுடியாத நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து சர்ச்சைக்குள்ள கருத்தாகவே கருதப்படும். அந்தக் கருத்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படும்போது அதுவே சரியான கருத்து என்று ஏற்கப்படும். தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், கருத்தாளர்கள், கொள்கையாளர்கள் வகுக்கும் கருத்துக்கள், கொள்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அரசியல் அடிப்படையில் பரிசீலனை செய்து ஏற்கும்.

[vuukle-powerbar-top]

Recent Post