Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை (2014 நாடாளுமன்றத் தேர்தல்)

 ஈழத்தில் உடனடியாக சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் ஈழம் ஐ.நா. பாதுகாப்புப் படையின் கீழாக கொண்டு வரப்பட வேண்டும். அதன் பின் தனி ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

 அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசு பணிகளில் 90% அந்தந்த மாநில மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

 தமிழகத்திற்குள் தொழிலில் ஈடுபடும் எந்த நிறுவனமும் 90% தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் வெளிப்படையான நிதி ஆதாரக் கொள்கையை வைத்திருக்க வேண்டும். தங்கள் வரவு செலவுகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்களை தேசிய மயமாக்கி அந்த நிறுவனங்கள் முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காகவே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசு படிப்படியாக மாநில அரசுகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்து
குறைந்த அதிகாரங்களையே தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிதி ஆதாரங்களில் மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வரிகளை ஒதுக்க வேண்டும். மத்திய அரசு தனக்குரிய வரிகளை தனியே வசூலிக்க வேண்டும்.

கச்சத் தீவை உடனே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் எந்தப் பகுதியையும் அப்பகுதி மக்களின் ஒப்புதல் இல்லாமல் யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

தமிழக மீனவர்கள் பாதுகாக்க சிறப்பு கடற்படை உருவாக்கப்படும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை எட்ட வேண்டும்.

மாநிலங்களில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் அந்தந்த மாநில மொழிகளையே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.

உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதன் மூலம் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு நதிநீர் மட்டத்தை உயர்த்தி தமிழகத்திற்கு அதிக தண்ணீர் கிடைக்கச் செய்தல்.

 ரயில்வே, தொலைபேசி, விமானப் போக்குவரத்து போன்ற துறைகளை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

மத்திய அரசு மதம் சாராத அரசாக இருக்க வேண்டும். அதேவேளையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்

வட மாநிலங்களில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து அதேவேளையில் அந்த தண்ணீரை தென் மாநிலங்களுக்கு கொண்டு வரும் வகையில் நதிகளை இணைத்தல்.

மத்திய அரசுக்கான வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிக்க மாநில உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி அதன் ஆலோசனையின் பேரில்தான் செயல்பட ஆவன செய்யப்படும்

எந்தவொரு மாநிலத்தின் அனுமதி இல்லாமல் அந்த மாநிலத்தின் இயற்கை வளங்களை எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுக்கும் வளங்களில் 90% மாநில அரசுக்குச் சேருவதாக இருக்க வேண்டும். பொதுவாக இந்தப் பணிகளில் தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தக்கூடாது. பொது நிறுவனங்களையே பயன்படுத்த வேண்டும்.

மத்திய அரசு மாநில அதிகாரங்களில் தலையிடும் அல்லது பறிக்கும் செயலை செய்யக் கூடாது. மாநில உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அதற்கான  முன்னெடுப்புகளை கூட்டமைப்பு செய்யும்

 பயனற்ற , அதிக செலவுகள் பிடிக்கும் ஜனாதிபதி, ஆளுநர் பதவிகளை நீக்கிவிட வேண்டும். எந்தவொரு காரணத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்கக் கூடாது. இதற்கான சட்டத் திருத்தத்திற்கு கூட்டமைப்பு பாடுபடும்

சமூக நீதி பேணப்பட வேண்டும். எல்லாச் சமுதாயங்களுக்கும் சம அந்தஸ்து, சம வாய்ப்பு, சம உரிமைகள், சம பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும். நாட்டில் உள்ள சமூக அவலங்களை ஒழிக்க வேண்டும். சமூகங்களிடையே பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட சமுதாயங்களின் உதவியுடன் அந்தப் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும்.

அனைவருக்கும் இலவச கல்வி தரமான தாய்மொழிக் அளிக்கப்படும்  . கல்வி அனைவரும் எளிதாக அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். தாய்மொழிக் கல்விக்கு முன்னுரியை வழங்கப்படும்.  

24. பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50% இட ஒதுக்கீடு வழங்கிட வழி செய்யப்படும்

25. ஊழல் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க அத்தனை நடவடிக்கையு
ம் எடுக்கப்பட வேண்டும்.  தமிழகத்திற்கு தனித்துவமான ஊழல் ஒழிப்பு சட்டத்தை உருவாக்கிட  வேண்டும்.  குற்றச்சாட்டுள்ள எந்தவொரு அதிகாரி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை அச்சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.




[vuukle-powerbar-top]

Recent Post