Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'தமிழீழ தாகம் தணியாது எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது' என்பதை மெய்ப்பித்த தமிழர்களின் மாபெரும் ஒன்றுகூடல் ! இந்தியா கவனிக்க வேண்டியது !

ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகேட்டு ஆயிரக்கணக்கில் ஐநா முன்றலில் கூடியது  பெரு நம்பிக்கை அளிக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர்கள் தங்கள் தாயகம் காக்க மீட்க இவ்வாறு ஆண்டுதோறும் ஒன்று கூடி தங்கள் இன ஒற்றுமையை உலகிற்கு காட்டின்றனர் . தாங்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதையும் விடுதலைப் புலிகள் தான் தங்கள் ஏகப் பிரதிநிதி , தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தான் தங்கள் தலைவர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக பறைசாற்றயுள்ளனர் உலகத் தமிழர்கள் . தமிழீழம் , இன்னு இல்லையேல் நாளை நிச்சயம் மலரும் , என்ன விலைக் கொடுத்தேனும் அதை மீட்போம் , உலகத் தமிழர்கள் நாங்கள் ஓய்ந்துவிடவில்லை , நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற செய்தியை உலக நாடுகளுக்கு கொடுத்துள்ளனர் .  தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே ஐநா விடம் தாங்கள் கேட்கும் கோரிக்கை என முழக்கமிட்டுள்ளனர். தமிழர்களின் தாயகத்தை சிங்களர்வர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதையும் சிங்கள அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளனர் . தமிழர்களின் இப்படியான தன் எழுச்சிப் போராட்டங்களை இந்தியா போன்ற நாடுகள் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்  . தமிழர்களின் நியாயமான உணர்வுகளை மதித்து தமிழர்களுக்கு ஆதரவான, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை ஐ,நாவில் எடுக்க வேண்டும் என்பதே தமிழகத் தமிழர்களின் விருப்பமாகும் . இதை இந்தியா செய்யாவிட்டால் வரலாறு  இந்தியாவை மன்னிக்காது. தமிழகத்தில் தோன்றியுள்ள இந்திய எதிர்ப்பு மேலும் வலுவடையும் . இது இந்திய அரசு தன் கையை வைத்து தானே குத்திக் கொள்வதற்கு சமமாகும் . இந்தியாவோடு தமிழகம் இணைந்திருக்க வேண்டுமென்றால் ஐநாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நியாயமான தீர்மானத்தை இந்திய அரசு கொண்டுவர வேண்டும் . இலங்கையை காப்பாற்றும் நடவடிக்கையில் இனிமேலும் ஈடுபடக் கூடாது .

இப்போராட்டத்தில் தமிழகத் தமிழர்கள் சார்பில் கலந்துகொண்ட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள்.

படங்கள் : Eelamranjan Eelamranjans

[vuukle-powerbar-top]

Recent Post