Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாநில மக்களின் இந்த கோரிக்கையை எந்த இந்திய தேசியக் கட்சியாவது ஏற்குமா ? தங்கள் தேர்தலில் இது குறித்து பேசுமா ?

இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் எந்த சட்டத்தையும் திட்டத்தையும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் நடுவண் அரசு நிறைவேற்றக் கூடாது. இது தான் உண்மையான கூட்டாச்சி முறையாகும்.

மாநிலங்களின் மொழி, பண்பாடு, கல்வி, இன  உரிமைகளில் நடுவண் அரசு தலையிடக் கூடாது.

மாநிலத்தின் நிலங்கள், இயற்கை வளங்கள் , மின்சாரம் அனைத்தும் மாநில அரசுக்கே சொந்தம் . அதை மாநில அரசின் ஒப்புதலோடு மட்டும் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.

மாநிலத்தில் இயங்கும் நடுவண் அரசு அலுவலகங்களில் மாநில மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். வேறு எந்த மொழியையும் திணிக்கக் கூடாது . ராணுவத்திற்கும் இது பொருத்தும் .

உலக அரங்கில் மக்களின் பண்பாட்டை, மொழியை எடுத்துச் செல்லும் நாணயங்கள் , அஞ்சல் தலைகள்,  கடவுச் சீட்டு போன்றவற்றில் மாநில மொழிகள் இடம்பெற வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் இந்தித் திணிப்பை நடுவண் அரசு உடனே நிறுத்த வேண்டும். இந்தியர்கள் எந்த மாநிலத்தில் குடியேறினாலும் அந்த மாநில மொழியை அவர்கள் பயில வேண்டும். மாநில மக்கள் இந்தி கற்க வேண்டும் என 'இந்தி'யர்கள் நினைக்கக் கூடாது . இந்தி பேசும் மாநிலங்களின் பிற மாநில மொழிகளை திணிக்காதது போல் இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி திணிப்பு நடக்ககக் கூடாது. அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுதல் வேண்டும் .

மாநில அரசு ஒரு மனதாக இயற்றிய தீர்மானத்தை நடுவண் அரசு கட்டாயமாக மதிப்பளித்து நிறைவேற்ற ஆவன செய்தல் வேண்டும். மாநில உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது நடுவண் அரசு செயல்பட்டால்  உச்ச நீதிமன்றத்தை மாநில அரசு அணுகலாம். மாநில அரசின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் நடுவண் அரசு கலைக்கப்பட வேண்டும். மேலும் பத்து மாநிலங்கள் சட்டமன்றத்தில் நடுவண் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நடுவண் அரசை கலைக்கப்பட வேண்டும் .  இது மாநிலங்களை பலப்படுத்தி மக்களின் உரிமைகளை காக்க உதவும் .

தொல்பொருள் ஆய்வு முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் வரவேண்டும்.

அந்தந்த மாநிலத்தில் இயங்கும் கப்பல் சேவை , விமான சேவை , தொடர்வண்டி சேவை , அஞ்சல் சேவை அனைத்தும் மாநில அரசின் கீழ் வர வேண்டும்.

முழுமையான மாநில சுயாட்சி முறையை அமல்படுத்த வேண்டும் .

இதை எந்த தேசியக் கட்சி ஏற்றாலும் அதை மக்கள் ஆதரிப்பதில் தவறில்லை .

[vuukle-powerbar-top]

Recent Post