Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை தமிழர்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை !

இந்திய அரசு தொடர்ந்து தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது . ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு  துணை போனது . மீனவர்கள் கொலை செய்யப்படும் போது வேடிக்கை பார்த்தது . தமிழக விவசாய நிலங்களை மீத்தேன் திட்டம் , கெயில் குழாய் திட்டம் என்று அபகரிக்க முயன்றது . இப்படி பல வகையில் இந்திய அரசு தமிழக மக்களுக்கு இன்னல்களை அளித்து வருகிறது . மேலும் தமிழர் அல்லாத இந்தி மக்களை தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் பணியில் அமர்த்தி தமிழர்களுக்கு கடும் துன்பத்தை கொடுத்து வருகிறது .

அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மக்களை தான் பாதுகாவலராக பணியில் அமர்த்த வேண்டும் . அதை விடுத்து  இந்தி அல்லாத மாநிலங்களில் 'இந்தி' யர்களை பணியில் அமர்த்தி இனப் பிரச்னையை உண்டு செய்கிறது இந்திய அரசு. இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தியை கட்டாயம் திணிப்பது போல் இந்திய அரசு இந்தி மக்களை இந்தி அல்லாத மாநிலங்களில் காவலுக்கு வைக்கிறது . இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் . இந்தி பேசும் மக்கள் வாழும் பகுதியில் தமிழ் மட்டுமே தெரிந்த காவலர்களை நியமிப்பதை இந்திய அரசு ஏற்குமா ? அது நியாயமாகுமா ? அதே போலத் தான் , இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி மட்டுமே பேசத் தெரிந்த பாதுகாவலரை இந்திய அரசு நியமிக்கக் கூடாது . விமான நிலையம் , துறைமுகம் , நடுவண் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இந்திய அரசு மாநில மொழிகள் தெரியாத இந்தி மக்களை வேலைக்கு அமர்த்துகிறது . இது இந்தி அல்லத மக்களை இரண்டாம் தர குடிமகனை போல் பாவிக்கும் செயலாகும் . இதற்கு மாநில அரசும் நடுவண் அரசும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் .

மாநிலத்தில் இயங்கும் அனைத்து நடுவண் அரசு துறைகளிலும் அந்தந்த மாநில மக்களையே பணியில் அமர்த்த வேண்டும் . அந்த மாநில மொழியை தெரிந்த காவலர்களையே பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் . அனைத்து நடுவண் அரசு நிறுவனங்களிலும் மாநில மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் . இது தான் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் , மொழிகளுக்கும் பாதுகாப்பு . இதை உடனே நடைமுறைப் படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படைகளை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் . அந்த இடத்தில தமிழக அரசின் காவல் படையே பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் . கொலை செய்யப்பட்ட என்.எல் சி ஊழியர் ராஜாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடும் குடும்ப நபருக்கு என்.எல் சி யில்  வேலையும் கொடுக்க வேண்டும் . கொலை செய்த இந்திய காவலருக்கு கடுமையான தண்டனை கொடுக்க ஆவன செய்தல் வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. 
[vuukle-powerbar-top]

Recent Post